Category: நஸாயி

Nasaayi-3004

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: (துல்ஹஜ் ஒன்பதாம் நாளான) அரஃபா நாளில் நோன்பு நோற்கத் தடை.

3004. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

துல்ஹஜ் ஒன்பது (அரஃபா), துல்ஹஜ் பத்து (ஹஜ்ஜுப் பெருநாள்), துல்ஹஜ் பதினொன்று பன்னிரண்டு பதிமூன்று (அய்யாமுத் தஷ்ரீக்) ஆகிய (ஐந்து) நாட்களும் இஸ்லாமியர்களான நம்முடைய பண்டிகை நாட்களாகும். அவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


«إِنَّ يَوْمَ عَرَفَةَ وَيَوْمَ النَّحْرِ وَأَيَّامَ التَّشْرِيقِ عِيدُنَا أَهْلَ الْإِسْلَامِ، وَهِيَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»


Nasaayi-149

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அங்கத்தூய்மையினால் ஒளி.

149. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அபூஹூரைரா (ரலி) அவர்கள் தொழுகைக்காக

அங்கத்தூய்மை செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பின்னால் நான் இருந்தேன். அப்போது அவர்கள், தம் கைகளை அக்குள் வரை நீட்டிக் கழுவிக்கொண்டிருந்தார்கள். நான், “அபூஹுரைராவே! இது என்ன அங்கத்தூய்மை (முறை)?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் என்னிடம், “ஃபர்ரூகின் மக்களே! நீங்கள் இங்குதான் இருக்கின்றீர்களா? நீங்கள் இருப்பதை நான் அறிந்திருந்தால், இந்த முறையில் அங்கத்தூய்மை செய்திருக்கமாட்டேன். என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் “இறைநம்பிக்கையாளர் ஒருவர் அங்கத்தூய்மை செய்யும் போது (அவர் உடலில்) தண்ணீர் படும் பகுதிகள் ஒளியாக அமையும்” என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.


كُنْتُ خَلْفَ أَبِي هُرَيْرَةَ وَهُوَ يَتَوَضَّأُ لِلصَّلَاةِ، وَكَانَ يَغْسِلُ يَدَيْهِ حَتَّى يَبْلُغَ إِبْطَيْهِ فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ مَا هَذَا الْوُضُوءُ؟ فَقَالَ لِي: يَا بَنِي فَرُّوخَ أَنْتُمْ هَاهُنَا لَوْ عَلِمْتُ أَنَّكُمْ هَاهُنَا مَا تَوَضَّأْتُ هَذَا الْوُضُوءَ، سَمِعْتُ خَلِيلِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «تَبْلُغُ حِلْيَةُ الْمُؤْمِنِ حَيْثُ يَبْلُغُ الْوُضُوءُ»


Nasaayi-1204

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

1204.

அல்லாஹ்வின் தூதர் (ஸ) அவர்கள் உமாமாவை சுமந்து கொண்டு தொழுபவர்களாக இருந்தார்கள். ஸஜ்தா செய்யும் போது (உமாமாவை) கீழே இறக்கி விடுவார்கள், எழுந்து நின்றதும் மீண்டும் தூக்கி கொள்வார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يُصَلِّي وَهُوَ حَامِلٌ أُمَامَةَ، فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ رَفَعَهَا»


Nasaayi-1203

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1203.

கருப்பு நிறத்திலான இரண்டை (பாம்பு,தேள்) தொழுகையின் போது (வந்தாலும் கூட) கொல்லுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْأَسْوَدَيْنِ فِي الصَّلَاةِ»


Nasaayi-102

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

102.

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும், தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும், கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)


«تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَرَفَ غَرْفَةً فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ وَجْهَهُ، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُمْنَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُسْرَى، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ بَاطِنِهِمَا بِالسَّبَّاحَتَيْنِ وَظَاهِرِهِمَا بَإِبْهَامَيْهِ، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُمْنَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُسْرَى»


Nasaayi-99

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 82

தலைக்கு ‘மஸ்ஹ்’ செய்யும் எண்ணிக்கை.

98. பாங்கு பற்றிய கனவு கண்டவரான அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உளூ) அங்கத்தூய்மை செய்ததைப் பார்த்தேன். அவர்கள் தம் முகத்தை மூன்று முறையும்; தம் இரு கைகளையும், இருகால்களையும் இரண்டிரண்டு முறையும் கழுவினார்கள். தம் தலைக்கு இரண்டு முறை ‘மஸ்ஹ்’ செய்தார்கள்.


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ مَرَّتَيْنِ، وَغَسَلَ رِجْلَيْهِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ»


Nasaayi-91

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

91.

அலீ (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து வரச் செய்து, வாய்கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி, இடது கையால் சுத்தம் செய்தார்கள். பின்னர் ‘இது தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையாகும்’என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்து கைர்


أَنَّهُ «دَعَا بِوَضُوءٍ، فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَنَثَرَ بِيَدِهِ الْيُسْرَى فَفَعَلَ هَذَا ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «هَذَا طُهُورُ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Nasaayi-147

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

147.

… ‘நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الْوُضُوءُ؟ قَالَ: «أَمَّا الْوُضُوءُ فَإِنَّكَ إِذَا تَوَضَّأْتَ فَغَسَلْتَ كَفَّيْكَ، فَأَنْقَيْتَهُمَا خَرَجَتْ خَطَايَاكَ مِنْ بَيْنِ أَظْفَارِكَ وَأَنَامِلِكَ، فَإِذَا مَضْمَضْتَ وَاسْتَنْشَقْتَ مَنْخِرَيْكَ وَغَسَلْتَ وَجْهَكَ وَيَدَيْكَ إِلَى الْمِرْفَقَيْنِ وَمَسَحْتَ رَأْسَكَ وَغَسَلْتَ رِجْلَيْكَ إِلَى الْكَعْبَيْنِ اغْتَسَلْتَ مِنْ عَامَّةِ خَطَايَاكَ، فَإِنْ أَنْتَ وَضَعْتَ وَجْهَكَ لِلَّهِ عَزَّ وَجَلَّ خَرَجْتَ مِنْ خَطَايَاكَ كَيَوْمَ وَلَدَتْكَ أُمُّكَ». قَالَ أَبُو أُمَامَةَ فَقُلْتُ: يَا عَمْرَو بْنَ عَبَسَةَ انْظُرْ مَا تَقُولُ أَكُلُّ هَذَا يُعْطَى فِي مَجْلِسٍ وَاحِدٍ؟ فَقَالَ: أَمَا وَاللَّهِ لَقَدْ كَبِرَتْ سِنِّي وَدَنَا أَجَلِي وَمَا بِي مِنْ فَقْرٍ فَأَكْذِبَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَقَدْ سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Nasaayi-5171

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5171.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவையையும், மண்சாடியையும், (போதைத்தரும்) பார்லி, கோதுமை பானத்தையும், (ஆண்கள்) தங்க மோதிரங்கள், சாதாரணப் பட்டு (ஹரீர்) ஆகியவற்றை அணிவதையும், சிகப்பு நிற மென்பட்டுத் திண்டுகளை (மீஸரா- பயன்படுத்துவதை) விட்டும் எங்களைத் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

 


قَالَ صَعْصَعَةُ بْنُ صُوحَانَ لِعَلِيٍّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، انْهَنَا عَمَّا نَهَاكَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالْجِعَةِ، وَعَنْ حِلَقِ الذَّهَبِ، وَلُبْسِ الْحَرِيرِ، وَعَنِ الْمِيثَرَةِ الْحَمْرَاءِ»


Next Page » « Previous Page