Category: நஸாயி

Nasaayi-5075

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5075.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள் சில புறாக்களின் நெஞ்சுப் பகுதியில் உள்ளதைப் போன்ற கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்கத்தின் வாடையைக் கூட பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி­)


«قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ، لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ»


Nasaayi-5056

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5056.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا»


Nasaayi-5055

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5055.

அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் விட்டு ஒருநாள் தலைவாருவதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி)  தலைவாருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا»


Nasaayi-5237

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5237. அபூகதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு (தோல்பட்டை வரைக்கும்) அடர்த்தியான தலை முடி இருந்து. இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், முடியை அழகுப்படுத்துமாறும், ஒவ்வொரு நாளும் (தலை வாரி) சீவுமாறும் கட்டளையிட்டார்கள்.


كَانَتْ لَهُ جُمَّةٌ ضَخْمَةٌ، فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَأَمَرَهُ أَنْ يُحْسِنَ إِلَيْهَا، وَأَنْ يَتَرَجَّلَ كُلَّ يَوْمٍ»


Nasaayi-1361

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1361. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிலவேளை) நின்றும், (சிலவேளை) அமர்ந்தும் பருகியதை நான் பார்த்துள்ளேன். (சிலவேளை) செருப்பணிந்தும், (சிலவேளை) செருப்பணியாமலும் தொழுததையும் பார்த்துள்ளேன். அவர்கள் (தொழுகையை முடிக்கும் போது) வலது புறமும், இடது புறமும் (சலாம் கூறி) திரும்புவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا، وَيُصَلِّي حَافِيًا وَمُنْتَعِلًا، وَيَنْصَرِفُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ»


Nasaayi-2044

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அடக்கத்தலத்தின் மீது உட்காருவது குறித்து வந்துள்ள கண்டனம்.

2044. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து விடுவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்ரு) மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ حَتَّى تَحْرُقَ ثِيَابَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Nasaayi-4695

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4695.


كَانَ رَجُلٌ يُدَايِنُ النَّاسَ، وَكَانَ إِذَا رَأَى إِعْسَارَ الْمُعْسِرِ قَالَ لِفَتَاهُ: تَجَاوَزْ عَنْهُ، لَعَلَّ اللَّهَ تَعَالَى يَتَجَاوَزُ عَنَّا، فَلَقِيَ اللَّهَ فَتَجَاوَزَ عَنْهُ


Nasaayi-4694

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4694.


إِنَّ رَجُلًا لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ، وَكَانَ يُدَايِنُ النَّاسَ، فَيَقُولُ لِرَسُولِهِ: خُذْ مَا تَيَسَّرَ، وَاتْرُكْ مَا عَسُرَ وَتَجَاوَزْ، لَعَلَّ اللَّهَ تَعَالَى أَنْ يَتَجَاوَزَ عَنَّا، فَلَمَّا هَلَكَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ: هَلْ عَمِلْتَ خَيْرًا قَطُّ؟ قَالَ: لَا. إِلَّا أَنَّهُ كَانَ لِي غُلَامٌ وَكُنْتُ أُدَايِنُ النَّاسَ، فَإِذَا بَعَثْتُهُ لِيَتَقَاضَى قُلْتُ لَهُ: خُذْ مَا تَيَسَّرَ، وَاتْرُكْ مَا عَسُرَ، وَتَجَاوَزْ لَعَلَّ اللَّهَ يَتَجَاوَزُ عَنَّا. قَالَ اللَّهُ تَعَالَى: قَدْ تَجَاوَزْتُ عَنْكَ


Next Page » « Previous Page