673.
«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ»
673.
«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ»
678. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.
பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.
பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
«إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ وَصَلُّوا عَلَيَّ؛ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا، ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ؛ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ أَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ»
922. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இமாம் பின்பற்றப்படுவதற்காகவே (முன்னிறுத்தப்பட்டுள்ளார்). எனவே, அவர் தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் (குர்ஆனை) ஓதினால், நீங்கள் மௌனமாக செவிமடுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அபூஅப்துர் ரஹ்மான்-நஸாயீ இமாம் கூறுகிறார்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் ஸஃத் அல்அன்சாரீ பலமானவர் என்று முஃகர்ரமி (ரஹ்) அவர்கள் (அடிக்கடி) கூறுவார்.
«إِنَّمَا الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا»
1740.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا فَرَغَ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثًا
1735.
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ»،
1751.
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَيَقُولُ بَعْدَ مَا يُسَلِّمُ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ يَرْفَعُ بِهَا صَوْتَهُ،
1750.
أَنَّهُ كَانَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَيَقُولُ بَعْدَ مَا يُسَلِّمُ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ يَرْفَعُ بِهَا صَوْتَهُ
1752. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (3 ரக்அத்) வித்ரு தொழுகையில் முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா (என்ற திருக்குர்ஆனின் 87 வது) அத்தியாயத்தையும், இரண்டாவது ரக்அத்தில் குல் யாஅய்யுஹல் காஃபிரூன் (என்ற 109 வது) அத்தியாயத்தையும், மூன்றாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத் (என்ற 112 வது) அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.
தொழுகையை முடிக்கும்போது, மூன்று முறை சத்தமாக “ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ்” (பொருள்: பேரரசனான, மகா தூய்மையான அல்லாஹ் குறைகளற்றவன்) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)
அபூஅப்துர்ரஹ்மான் (ஆகிய நஸாயீ இமாம்) கூறுகிறார்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூநுஐம் அவர்கள் எங்களுடைய பார்வையில் முஹம்மத் பின் உபைத், காஸிம் பின் யஸீத் ஆகியோரைவிட மிகவும் பலமானவர்.
எங்களுடைய பார்வையில் இந்த ஹதீஸை அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் மாணவர்களில் மிகவும் பலமானவர்கள் (வரிசை முறை-அல்லாஹ்வே மிக அறிந்தவன்) யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அவருக்குப் பிறகு அப்துல்லாஹ் பின் முபாரக், பிறகு வகீஃ பின் ஜர்ராஹ், பிறகு அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, பிறகு அபூநுஐம், பிறகு அஸ்வத் ஆகியோர் ஆவார்கள்.
மேலும், ஸுபைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஜரீர் பின் ஹாஸிம் அவர்கள்,
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا أَرَادَ أَنْ يَنْصَرِفَ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثًا يَرْفَعُ بِهَا صَوْتَهُ،
5266. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சிவப்பு நிற ஆடை அணிவதையும், தங்கம் மோதிரம் அணிவதையும், ருகூவில் குர்ஆன் ஓதுவதை விட்டும் நான் தடுக்கப்பட்டேன்.
«نُهِيتُ عَنِ الثَّوْبِ الْأَحْمَرِ، وَخَاتَمِ الذَّهَبِ، وَأَنْ أَقْرَأَ وَأَنَا رَاكِعٌ»
பாடம்:
சிறு தொடக்கு ஏற்படாதபோது உளூச் செய்யும் முறை.
130. நஸ்ஸால் பின் ஸப்ரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் அலீ (ரலி) அவர்கள் லுஹர் தொழுகையை நிறைவேற்றியதைப் பார்த்தேன். பின்னர், மக்களின் தேவைகளுக்காக அமர்ந்தார்கள். அஸர் தொழுகை நேரம் வந்தபோது, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து ஒரு கையளவு நீர் எடுத்துத் தமது முகம், இரு கைகள், தலை மற்றும் இரு கால்களில் தடவினார்கள் (மஸஹ் செய்தார்கள்). பின்னர் மீதமுள்ள நீரை நின்று கொண்டே அருந்தினார்கள்.
மேலும் கூறினார்கள்: “நிச்சயமாக சிலர் இதை வெறுக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன். இது ஹதஸ் (சிறு தொடக்கு எனும் உடலைத் தூய்மை இழக்கச் செய்யும் நிலை) ஏற்படாதவரின் உளூவாகும்.
رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ صَلَّى الظُّهْرَ، ثُمَّ قَعَدَ لِحَوَائِجِ النَّاسِ، فَلَمَّا حَضَرَتِ الْعَصْرُ أُتِيَ بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَأَخَذَ مِنْهُ كَفًّا فَمَسَحَ بِهِ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَرَأْسَهُ وَرِجْلَيْهِ، ثُمَّ أَخَذَ فَضْلَهُ فَشَرِبَ قَائِمًا، وَقَالَ: «إِنَّ نَاسًا يَكْرَهُونَ هَذَا، وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ وَهَذَا وُضُوءُ مَنْ لَمْ يُحْدِثْ»
சமீப விமர்சனங்கள்