Category: நஸாயி

Nasaayi-4446

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4446. “ஒரு மனிதன் சிட்டுக்குருவியை வீணாகக் கொன்றால், அது மறுமை நாளில் மகத்துவமும் மாண்பும்கொண்ட அல்லாஹ்விடம் சப்தமிட்டு, “எனது இறைவா! இன்ன மனிதன் என்னை வீணாகக் கொன்றான். ஏதேனும் பயன்பாட்டுக்காக என்னைக் கொல்லவில்லை என்று முறையிடும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஷரீத் பின் ஸுவைத் (ரலி)

 


مَنْ قَتَلَ عُصْفُورًا عَبَثًا عَجَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ: يَا رَبِّ، إِنَّ فُلَانًا قَتَلَنِي عَبَثًا، وَلَمْ يَقْتُلْنِي لِمَنْفَعَةٍ


Nasaayi-4349

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 

சிட்டுக்குருவிகளை உண்ண அனுமதி.

4349. “எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளையோ அதைவிடப் பெரிய பறவைகளையோ நியாயமான முறையில் இல்லாமல் கொன்றால், அவனை அதுபற்றி மகத்துவமும் மாண்பும்கொண்ட அல்லாஹ் விசாரிக்காமல் விடமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! அதனுடைய நியாயமான முறை என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றை அறுத்து அவன் உண்பது (நியாயமான முறையாகும்); (வீணாகப் பிடித்து) அவற்றின் தலையை முறித்து வீசிவிடுவது (நியாயமற்ற முறையாகும்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَا مِنْ إِنْسَانٍ قَتَلَ عُصْفُورًا فَمَا فَوْقَهَا بِغَيْرِ حَقِّهَا، إِلَّا سَأَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهَا»، قِيلَ يَا رَسُولَ اللَّهِ، وَمَا حَقُّهَا؟ قَالَ: «يَذْبَحُهَا فَيَأْكُلُهَا، وَلَا يَقْطَعُ رَأْسَهَا يَرْمِي بِهَا»


Nasaayi-4381

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4381.


قَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَصْحَابِهِ أَضَاحِيَّ، فَأَصَابَنِي جَذَعَةٌ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَصَابَتْنِي جَذَعَةٌ، فَقَالَ: «ضَحِّ بِهَا»


Nasaayi-3228

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

விபச்சாரியை மணமுடித்தல் (கூடாது).

3228. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) மர்ஸத் பின் அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) அவர்கள் பலமான மனிதராக இருந்தார். மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கைதிகளை (இரவோடு இரவாக) தூக்கி வந்து சேர்ப்பவராகவும் இருந்தார்.

(அவர் கூறுகிறார்):

நான் ஒரு மனிதரைத் தூக்கிச் செல்வதற்காக அவரை (என்னுடன் வருமாறு) அழைத்தேன். மக்காவில் அனாக் எனும் விபச்சாரி ஒருத்தி இருந்தாள். அவள்(நான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு) என்னுடைய காதலியாக இருந்தாள். (நான் அந்த மனிதரை அழைக்கச் சென்ற போது) அவள் வெளியே வந்து, சுவரின் நிழலில் என் உருவத்தைப் பார்த்துவிட்டாள். “இவர் யார்? மர்ஸதா?, மர்ஸதே! வருக, வருக! இவ்விரவின் இப்பயணத்தில் என்னிடம் தங்கிவிட்டுச் செல்வீராக!” என்று கூறினாள். (அப்போது நான் அவளிடம்) “அனாக்! திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விபச்சாரத்தைத் தடை செய்துள்ளார்கள்” என்று கூறினேன். உடனே அவள், “கூடாரங்களில் இருப்போரே! (மக்களே) இவர் (ஒரு) முள்ளம்பன்றி(யைப் போன்றவர்). இவர் உங்களுடைய கைதிகளை மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கொண்டுசெல்பவர்” என்று கூறி (என்னைப் பிடிக்கச் சொன்)னாள். உடனே நான் (மக்காவின் மலை) ‘கன்தமா’ நோக்கி ஓடிச் சென்றேன்.

என்னை எட்டுப்பேர் தேடி வந்தார்கள்.

أَنَّ مَرْثَدَ بْنَ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيَّ، وَكَانَ رَجُلًا شَدِيدًا، وَكَانَ يَحْمِلُ الْأُسَارَى مِنْ مَكَّةَ، إِلَى الْمَدِينَةِ، قَالَ: فَدَعَوْتُ رَجُلًا لِأَحْمِلَهُ، وَكَانَ بِمَكَّةَ بَغِيٌّ يُقَالُ لَهَا: عَنَاقُ، وَكَانَتْ صَدِيقَتَهُ، خَرَجَتْ فَرَأَتْ سَوَادِي فِي ظِلِّ الْحَائِطِ، فَقَالَتْ: مَنْ هَذَا مَرْثَدٌ، مَرْحَبًا وَأَهْلًا يَا مَرْثَدُ، انْطَلِقِ اللَّيْلَةَ فَبِتْ عِنْدَنَا فِي الرَّحْلِ، قُلْتُ: يَا عَنَاقُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ الزِّنَا، قَالَتْ: يَا أَهْلَ الْخِيَامِ، هَذَا الدُّلْدُلُ، هَذَا الَّذِي يَحْمِلُ أُسَرَاءَكُمْ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ، فَسَلَكْتُ الْخَنْدَمَةَ، فَطَلَبَنِي ثَمَانِيَةٌ، فَجَاءُوا حَتَّى قَامُوا عَلَى رَأْسِي، فَبَالُوا، فَطَارَ بَوْلُهُمْ عَلَيَّ، وَأَعْمَاهُمُ اللَّهُ عَنِّي، فَجِئْتُ إِلَى صَاحِبِي، فَحَمَلْتُهُ، فَلَمَّا انْتَهَيْتُ بِهِ إِلَى الْأَرَاكِ، فَكَكْتُ عَنْهُ كَبْلَهُ، فَجِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنْكِحُ عَنَاقَ، فَسَكَتَ عَنِّي، فَنَزَلَتْ: {الزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ} [النور: 3]، فَدَعَانِي، فَقَرَأَهَا عَلَيَّ وَقَالَ: «لَا تَنْكِحْهَا»


Nasaayi-2597

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2597.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள; ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெற அனுமதியில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ، وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ»


Nasaayi-3671

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

அநாதைகளின் சொத்துக்களை (அநியாயமாக) உண்பதை விட்டு விலகியிருப்பது.

3671. “அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,
1 . “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . கஞ்சத்தனம் செய்வதும்,
3 . நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும்,
4 . வட்டியை உண்பதும்,
5 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
6 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
7 . கற்புள்ள அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَا هِيَ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالشُّحُّ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ»


Nasaayi-73

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவருக்கு உளூச் செய்ய போதுமான தண்ணீரின் அளவு.

73. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள்; ஐந்து முத்து அளவுத் தண்ணீரில் குளிப்பார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَتَوَضَّأُ بِمَكُّوكٍ وَيَغْتَسِلُ بِخَمْسِ مَكَاكِيَّ»


Nasaayi-72

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

குளிப்புக் கடமையானவரின் சிறப்பு.

72. நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரே பாத்திரத்தில் (சேர்ந்து) குளிப்பேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْإِنَاءِ الْوَاحِدِ


Nasaayi-71

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

71. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து (ஓரிடத்தில்) உளூச் செய்வார்கள்.


كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيعًا


Nasaayi-70

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மாதவிடாய்ப் பெண் வாய் வைத்து, மீதம்வைத்த தண்ணீர்.

70. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள்.


كُنْتُ أَتَعَرَّقُ الْعَرْقَ «فَيَضَعُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاهُ حَيْثُ وَضَعْتُ وَأَنَا حَائِضٌ، وَكُنْتُ أَشْرَبُ مِنَ الْإِنَاءِ فَيَضَعُ فَاهُ حَيْثُ وَضَعْتُ وَأَنَا حَائِضٌ»


Next Page » « Previous Page