ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
7508. அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இங்கே மரணத் தருவாயில் ஒரு இளைஞன் இருக்கிறார். அவரிடம் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்லுமாறு கூறப்படுகிறது. ஆனால் அவரால் அதைச் சொல்ல முடியவில்லை” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் தனது வாழ்நாளில் அதைச் சொல்பவராக இருந்தாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அங்கிருந்தவர்கள், “ஆம்” என்றனர். “அவரது மரணத்தின் போது அதைச் சொல்ல விடாமல் தடுத்தது எது?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம். அவர்கள் அந்த இளைஞரிடம் வந்ததும், “இளைஞனே! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்” என்றார்கள். அதற்கு அவர், “என்னால் அதைச் சொல்ல முடியவில்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள், “ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “எனது தாய்க்கு நான் மாறு செய்ததினால் (அவரது மனதை காயப்படுத்தியதால்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமது தாய் உயிரோடு இருக்கிறாரா?” என்று கேட்க, “ஆம்” என்றார் அவர். நபி (ஸல்) அவர்கள், “அவரை அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள்.
அவரை அழைத்து வந்ததும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “இவர் உமது
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ هَهُنَا غُلَامًا قَدِ احْتُضِرَ يُقَالُ لَهُ قُلْ: لَا إِلَهَ إِلَّا اللهُ فَلَا يَسْتَطِيعَ أَنْ يَقُولَهَا، قَالَ: ” أَلَيْسَ قَدْ كَانَ يَقُولُهَا فِي حَيَاتِهِ؟ ” قَالُوا: بَلَى، قَالَ: ” فَمَا مَنَعَهُ مِنْهَا عِنْدَ مَوْتِهِ؟ ” قَالَ: فَنَهَضَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَهَضْنَا مَعَهُ حَتَّى أَتَى الْغُلَامَ، فَقَالَ: ” يَا غُلَامُ قُلْ: لَا إِلَهَ إِلَّا اللهُ “، قَالَ: لَا أَسْتَطِيعُ أَنْ أَقُولَهَا، قَالَ: ” وَلِمَ؟ ” قَالَ: لِعُقُوقِ وَالِدَتِي، قَالَ: ” أَحَيَّةٌ هِيَ؟ ” قَالَ: نَعَمْ، قَالَ: ” أَرْسِلُوا إِلَيْهَا “، فَأَرْسَلُوا إِلَيْهَا فَجَاءَتْ، فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” ابْنُكِ هُوَ؟ ” قَالَتْ: نَعَمْ، قَالَ: ” أَرَأَيْتِ لَوْ أَنَّ نَارًا أُجِّجَتْ فَقِيلَ لَكَ: إِنْ لَمْ تَشْفَعِي لَهُ قَذَفْنَاهُ فِي هَذِهِ النَّارِ “، قَالَتْ: إِذًا كُنْتُ أَشْفَعُ لَهُ، قَالَ: ” فَأَشْهِدِي اللهَ، وَأَشْهِدِينَا مَعَكَ بِأَنَّكَ قَدْ رَضِيتِ “، قَالَتْ: قَدْ رَضِيتُ عَنِ ابْنِي، قَالَ: ” يَا غُلَامُ، قُلْ: لَا إِلَهَ إِلَّا اللهُ “، فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ
சமீப விமர்சனங்கள்