Category: ஷுஅபுல் ஈமான்

Shuabul-Iman

Shuabul-Iman-7572

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7572. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும், தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ


Shuabul-Iman-7471

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7471. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும், செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது பெற்றோருக்கு உபகாரம் செய்யட்டும், தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


مَنْ أَحَبَّ أَنْ يُمِدَّ اللهُ فِي عُمْرِهِ، وَيَزِيدَ فِي رِزْقِهِ، فَلْيَبَرَّ وَالِدَيْهِ، وَلْيَصِلْ رَحِمَهُ


Shuabul-Iman-7583

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7583. அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களிடம் நான் உறவு பாராட்டுகின்றேன். அவர்களோ என்னிடம் பகைமை பாராட்டுகின்றனர். நான் உதவி செய்கின்றேன். அவர்கள் எனக்கு ஊறு விளைவிக்கின்றார்கள். அவர்களிடம் நான் பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் என்னிடம் அறிவீனத்தையே கடைப்பிடிக்கின்றார்கள்” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ சொல்வது போன்ற நிலையில் இருந்தால் நீ அவர்களை சூடான சாம்பலைத் திண்ணச் செய்தவன் போலாவாய். (அதாவது அவர்கள் தங்கள் மீது மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்) இதே நிலையை நீ தொடர்கின்ற வரை அவர்களின் தீமையை விட்டு காப்பதற்காக ஓர் உதவியாளர் (வானவர்) உன்னுடன் இருந்து கொண்டே இருப்பார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي، وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ، وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنْ كَانَ كَمَا تَقُولُ فَكَأَنَّمَا تُسِفُّهُمُ الْمَلَّ، وَلَا يَزَالُ مَعَكَ مِنَ اللهِ ظَهِيرٌ مَا دُمْتَ عَلَى ذَلِكَ


Shuabul-Iman-6284

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6284. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வட்டியில் மிக மோசமான வட்டி, அநியாயமாக ஒரு முஸ்லிமின் மானத்தை வாங்குவதாகும். உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்துவிடுவான்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


مِنْ أَرْبَى الرِّبَا الِاسْتِطَالَةُ فِي عِرْضِ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ، وَإِنَّ هَذِهِ الرَّحِمَ شَجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَمَنْ قَطَعَهَا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ


Shuabul-Iman-7558

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7558. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், “என்ன?” என்று கேட்டான். அதற்கு உறவு, “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரி நிற்கின்றேன்” என்று கூறியது. “உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? ”

என்ற (47:22-24) வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்…

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِنَّ اللهَ تَعَالَى خَلَقَ الْخَلْقَ، حَتَّى إِذَا فَرَغَ مِنْهُمْ قَامَتِ الرَّحِمُ فَأَخَذَتْ بِحَقْوِ الرَّحْمَنِ، فَقَالَ: مَهْ، فَقَالَتْ: هَذَا مَكَانُ الْعَائِذِ مِنَ الْقَطِيعَةِ؟ قَالَ: نَعَمْ، أَمَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟ قَالَتْ: بَلَى، قَالَ: فَذَاكَ لَكِ “، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اقْرَأُوا إِنْ شِئْتُمْ: {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ، وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللهُ، فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا} [محمد: 23]


Shuabul-Iman-7557

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7557. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் உறவுக்கு நாவு இருக்கும். அது அல்லாஹ்வின் அரியாசனத்தின் கீழிருந்துக் கொண்டு “ என் இறைவா நான் துண்டிக்கப்பட்டேன், என் இறைவா நான் அநீதமிழைக்கப்பட்டேன், என் இறைவா நான் கெடுதல் செய்யப்பட்டேன் ” என முறையிடும்.

அப்போது அல்லாஹ், “உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று அதற்கு பதிலளிப்பான்…

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِنَّ لِلرَّحِمِ لِسَانًا يَوْمَ الْقِيَامَةِ تَحْتَ الْعَرْشِ فَتَقُولُ: يَا رَبِّ قُطِعْتُ يَا رَبِّ ظُلِمْتُ، يَا رَبِّ أُسِيءَ إِلَيَّ، فَيُجِيبُهَا رَبُّهَا: أَلَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعُ مَنْ قَطَعَكِ؟


Shuabul-Iman-7580

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7580. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ – يَعْنِي قَاطِعَ الرَّحِمِ


Shuabul-Iman-7579

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7579. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ


Shuabul-Iman-1543

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1543. சீனா சென்றேனும் கல்வியை தேடு. ஏனெனில் கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

 

பைஹகீ (நூலாசிரியர்) கூறுகிறார்:

இந்த செய்தி பிரபலமானதாகும். ஆனால் இதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும். இது பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பலவீனமானதாகும்.


اطْلُبُوا الْعِلْمَ وَلَوْ بِالصِّينِ، فَإِنَّ طَلَبَ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ


Shuabul-Iman-8540

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8540. கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (இருந்தது)’ என்றார்கள்.


قُلْتُ لِأَنَسٍ: كَانَتِ الْمُصَافَحَةُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قَالَ: ” نَعَمْ


Next Page » « Previous Page