Category: திர்மிதீ

Tirmidhi-658

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

658.

யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்; ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி)


«إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ، فَإِنَّهُ بَرَكَةٌ، فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَالمَاءُ فَإِنَّهُ طَهُورٌ» وقَالَ: ” الصَّدَقَةُ عَلَى المِسْكِينِ صَدَقَةٌ، وَهِيَ عَلَى ذِي الرَّحِمِ ثِنْتَانِ: صَدَقَةٌ وَصِلَةٌ “


Tirmidhi-1860

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1860.


«مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Tirmidhi-1859

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 48

கையில் கொழுப்பு வாடை வீச இரவில் உறங்குவது வெறுப்புக்குரியது என்பது தொடர்பாக வந்துள்ளவை.

1859. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக ஷைத்தான், மோப்ப சக்தி உள்ளவன்; நாவால் நக்குபவன். எனவே, உங்கள் (உடல்) விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையோடு இருந்துகொள்ளுங்கள்.

(உணவு உண்ட) கையில் கொழுப்பு வாடை வீச ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்மைத் தவிர வேறு யாரையும் நிச்சயமாகப் பழிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி, இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது ”ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்தக் கருத்தில் (சிலவை), ஸுஹைல் பின் ஸாலிஹ் அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்களின் செய்தியாக வேறுசில அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.


«إِنَّ الشَّيْطَانَ حَسَّاسٌ لَحَّاسٌ فَاحْذَرُوهُ عَلَى أَنْفُسِكُمْ، مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Tirmidhi-1972

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1972. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியான் பொய் பேசும்போது அதனுடைய துர்வாடையால் வானவர், ஒரு மைல் தூரம் அவனை விட்டும் தூரமாகிவிடுகிறார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும்) யஹ்யா பின் மூஸா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அப்துர்ரஹீம் பின் ஹாரூன் என்பவரிடம், “இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் வழியாக அப்துல்அஸீஸ் பின் அபூரவ்வாத் அவர்கள் இந்த செய்தியை உங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அப்துர்ரஹீம் என்பவர் “ஆம்” என்று கூறினார்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்த செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

மேலும், இந்தச் செய்தியை அப்துர்ரஹீம் பின் ஹாரூன் என்பவர் தனித்து அறிவித்துள்ளார்.


«إِذَا كَذَبَ العَبْدُ تَبَاعَدَ عَنْهُ المَلَكُ مِيلًا مِنْ نَتْنِ مَا جَاءَ بِهِ؟»

قَالَ يَحْيَى: فَأَقَرَّ بِهِ عَبْدُ الرَّحِيمِ بْنُ هَارُونَ، فَقَالَ: نَعَمْ،


Tirmidhi-1951

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 33

பிள்ளைக்கு ஒழுக்கம் போதுப்பது தொடர்பாக வந்துள்ளவை.

1951. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் பிள்ளைக்கு (ஒரேயொருமுறை) ஒழுக்கம் போதுப்பது ஒரு ஸாஉ அளவு தர்மம் செய்வதைவிடச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)


«لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ»


Tirmidhi-3319

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

..

3319.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் முதன் முதலாக எழுதுகோலை படைத்து அதற்கு எழுது என்று கட்டளையிட்டான். எனவே அது, இறுதி நாள் வரையுள்ள அனைத்தையும் எழுதியது.


قَدِمْتُ مَكَّةَ فَلَقِيتُ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ فَقُلْتُ: يَا أَبَا مُحَمَّدٍ إِنَّ نَاسًا عِنْدَنَا يَقُولُونَ فِي القَدَرِ، فَقَالَ عَطَاءٌ: لَقِيتُ الوَلِيدَ بْنَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ القَلَمَ، فَقَالَ لَهُ: اكْتُبْ، فَجَرَى بِمَا هُوَ كَائِنٌ إِلَى الأَبَدِ


Tirmidhi-2269

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2269. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குராசானிலிருந்து கருப்புக்கொடிகள் வரும். அதை யாராலும் தடுக்க முடியாது. இறுதியில் அவை ஈலியாவில் (பைத்துல் முகத்தஸ்) நிறுவப்படும்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)


«تَخْرُجُ مِنْ خُرَاسَانَ رَايَاتٌ سُودٌ لَا يَرُدُّهَا شَيْءٌ حَتَّى تُنْصَبَ بِإِيلِيَاءَ»


Tirmidhi-373

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(நஃபில் எனும்) கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழுவது குறித்து வந்துள்ளவை.

373. நபி (ஸல்) அவர்களின் மனைவி(யரில் ஒருவரான) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நஃபில் எனும்) கூடுதலான  தொழுகைகளை உட்கார்ந்து தொழுததை நான் பார்த்ததில்லை; அவர்கள் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்புவரை இந்நிலையே நீடித்தது. பிறகு அவர்கள் கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழலானார்கள்.

அப்போது அவர்கள், ஒரு அத்தியாயத்தை (ஓதினால் அதை வேக வேகமாக ஓதாமல்) நிறுத்தி நிதானமாக ஓதுவார்கள். எந்த அளவிற்கென்றால் (அவர்கள் சிறிய அத்தியாயத்தை ஓதினால்கூட) அது நீளமான அத்தியாயத்தை போன்று இருக்கும்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, உம்மு ஸலமா (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வழியாக வரும் மேற்கண்ட ஹதீஸ், “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

”நபி (ஸல்) அவர்கள் இரவில் உட்கார்ந்தபடியே (ஓதித்) தொழுவார்கள்; ஓதவேண்டிய முப்பது அல்லது நாற்பது வசனங்கள் அளவுக்கு எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அவற்றை ஓதுவார்கள். பிறகு ருகூஉ செய்வார்கள். இவ்வாறே இரண்டாவது ரக்அத்திலும்

«مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي سُبْحَتِهِ قَاعِدًا، حَتَّى كَانَ قَبْلَ وَفَاتِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَامٍ، فَإِنَّهُ كَانَ يُصَلِّي فِي سُبْحَتِهِ قَاعِدًا، وَيَقْرَأُ بِالسُّورَةِ وَيُرَتِّلُهَا، حَتَّى تَكُونَ أَطْوَلَ مِنْ أَطْوَلَ مِنْهَا»،


Tirmidhi-75

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

75. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் இருக்கும்போது தமது ஆசனவாய் வழியே வாயு பிரிந்ததைப் போன்று தோன்றினால், அவர் (வாயு பிரிந்ததன்) சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது நாற்றத்தை உணராத வரை (உளூ செய்வதற்காக அங்கிருந்து) வெளியேற வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழியாகும்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), அலீ பின் தல்க் (ரலி), ஆயிஷா (ரலி), அபூஸயீத் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாயு பிரிவதன் சப்தத்தைக் கேட்பது, அல்லது நாற்றத்தை உணர்வது ஆகியவை நிகழாமல் உளூ முறியாது என்பதே அறிஞர்களின் கூற்றாகும்.

அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், “உளூ முறிந்து விட்டதா? என எவருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், முறிந்துவிட்டது எனச் சத்தியமிட்டுச் சொல்லும் அளவுக்கு உறுதி ஏற்பட்டால் தவிர, அவர் (மீண்டும்) உளூச் செய்வது கடமையாகாது. பெண்ணின் முன் துவாரத்திலிருந்து காற்று வெளிப்பட்டால் (மீண்டும்)

«إِذَا كَانَ أَحَدُكُمْ فِي المَسْجِدِ فَوَجَدَ رِيحًا بَيْنَ أَلْيَتَيْهِ فَلَا يَخْرُجْ حَتَّى يَسْمَعَ صَوْتًا، أَوْ يَجِدَ رِيحًا»


Tirmidhi-60

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

60.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلَاةٍ»، قُلْتُ: فَأَنْتُمْ مَا كُنْتُمْ تَصْنَعُونَ؟ قَالَ: «كُنَّا نُصَلِّي الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ مَا لَمْ نُحْدِثْ».


Next Page » « Previous Page