Category: திர்மிதீ

Tirmidhi-773

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 59

அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்களில் நோன்பு நோற்கலாகாது என்பது தொடர்பாக வந்துள்ளவை.

773. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

துல்ஹஜ் ஒன்பது (அரஃபா), துல்ஹஜ் பத்து (ஹஜ்ஜுப் பெருநாள்), துல்ஹஜ் பதினொன்று பன்னிரண்டு பதிமூன்று (அய்யாமுத் தஷ்ரீக்) ஆகிய (ஐந்து) நாட்களும் இஸ்லாமியர்களான நம்முடைய பண்டிகை நாட்களாகும். அவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அலீ (ரலி), ஸஃத் (ரலி), அபூஹுரைரா (ரலி), ஜாபிர் (ரலி), நுபைஷா (ரலி), பிஷ்ர் பின் ஸுஹைம் (ரலி), அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி), அனஸ் (ரலி), ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி), கஅப் பின் மாலிக் (ரலி), ஆயிஷா (ரலி), அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர்; அய்யாமுத்

«يَوْمُ عَرَفَةَ، وَيَوْمُ النَّحْرِ، وَأَيَّامُ التَّشْرِيقِ، عِيدُنَا أَهْلَ الإِسْلَامِ، وَهِيَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»


Tirmidhi-3690

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3690. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரிலிருந்து திரும்பி வந்தனர். அப்போது கறுப்பு நிறமுடைய பெண் வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களை நல்லபடியாகத் திருப்பிக் கொண்டு வந்து சேர்த்தால் உங்கள் முன்னால் கொட்டு அடித்து பாட்டுப் பாடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன் எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ நேர்ச்சை செய்திருந்தால் அவ்வாறு செய்! இல்லாவிட்டால் செய்ய வேண்டாம் எனக் கூறினார்கள். உடனே அப்பெண் கொட்டு அடிக்கலானார்.

அபூபக்ர் (ரலி) வந்தார்கள். அப்போதும் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் அலீ (ரலி) வந்தார்கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உஸ்மான் (ரலி) வந்தார்கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உமர் (ரலி) வந்தார்கள். உடனே அவர் கொட்டை கீழே போட்டார்.

 

 


خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ، فَلَمَّا انْصَرَفَ جَاءَتْ جَارِيَةٌ سَوْدَاءُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ نَذَرْتُ إِنْ رَدَّكَ اللَّهُ سَالِمًا أَنْ أَضْرِبَ بَيْنَ يَدَيْكَ بِالدُّفِّ وَأَتَغَنَّى، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ كُنْتِ نَذَرْتِ فَاضْرِبِي وَإِلَّا فَلَا». فَجَعَلَتْ تَضْرِبُ، فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عُمَرُ فَأَلْقَتِ الدُّفَّ تَحْتَ اسْتِهَا، ثُمَّ قَعَدَتْ عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ لَيَخَافُ مِنْكَ يَا عُمَرُ، إِنِّي كُنْتُ جَالِسًا وَهِيَ تَضْرِبُ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ، فَلَمَّا دَخَلْتَ أَنْتَ يَا عُمَرُ أَلْقَتِ الدُّفَّ»


Tirmidhi-607

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 75

மறுமை நாளில் இந்தச் சமுதாயத்தாரின் சிறப்பு அடையாளம், அவர்கள் செய்த அங்கத்தூய்மை மற்றும் ஸஜ்தாவின் அறிகுறிகள்தான் என்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.

607. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தார் (உலகில்) ‘ஸஜ்தா’ செய்ததன் காரணமாக முகம் வெண்மையானவர்களாகவும், அங்கத்தூய்மை (உளூ) செய்ததன் காரணமாக (பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாவும் மறுமை நாளில் இருப்பார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) வழியாக வரும் இந்த அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«أُمَّتِي يَوْمَ القِيَامَةِ غُرٌّ مِنَ السُّجُودِ، مُحَجَّلُونَ مِنَ الوُضُوءِ»


Tirmidhi-82

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஆண்குறியை தொட்டுவிட்டால் உளூச் செய்வது (அவசியம்).

82. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் தனது ஆண்குறியை தொட்டுவிட்டால் உளூச் செய்யாமல் தொழக் கூடாது.

அறிவிப்பவர்: புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி உம்மு ஹபீபா (ரலி), அபூஅய்யூப் (ரலி), அபூஹுரைரா (ரலி), அர்வா பின்த் உனைஸ் (ரலி), ஆயிஷா (ரலி), ஜாபிர் (ரலி), ஸைத் பின் காலித் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்தச் செய்தியை ஹிஷாம் பின் உர்வா அவர்களிடமிருந்து, ஹிஷாம் பின் உர்வா —> உர்வா பின் ஸுபைர் —> புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் அறிவிப்பதைப் போன்றே பலரும் அறிவித்துள்ளனர்.


«مَنْ مَسَّ ذَكَرَهُ فَلَا يُصَلِّ حَتَّى يَتَوَضَّأَ»


Tirmidhi-34

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 26

தலைக்கு ‘மஸ்ஹு’ செய்வது ஒரு முறைதான் என்பது தொடர்பாக வந்துள்ளவை.

34 . ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தபோது, (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி மஸ்ஹு செய்ததை நான் கண்டேன். அப்போது அவர்கள் முன்தலையில் தமது கையை முன்னிருந்து (பின்னாகவு)ம் பின்னிருந்து (முன்னாகவு)ம் மஸ்ஹு செய்தார்கள். மேலும், தமது நெற்றிப் பொட்டுகளிலும் காதுகளிலும் தடவினார்கள். ஒரே ஒரு முறையே இவ்வாறு தடவினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அலீ (ரலி), அம்ர் பின் கஅப் (ரலி) ஆகியோர் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ‘ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்ததாகும்.

நபி (ஸல்) அவர்கள் தமது தலைக்கு ஒரே முறை மட்டுமே மஸ்ஹு செய்ததாகப் பல்வேறு அறிவிப்பாளர் தொடர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நபித்தோழர்கள் மற்றும் அவர்களுக்குப் பின்வந்த அறிஞர்களில் பெரும்பாலோர் இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமெனக் கருதுகின்றனர்.

أَنَّهَا رَأَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ، قَالَتْ: «مَسَحَ رَأْسَهُ، وَمَسَحَ مَا أَقْبَلَ مِنْهُ، وَمَا أَدْبَرَ، وَصُدْغَيْهِ، وَأُذُنَيْهِ مَرَّةً وَاحِدَةً»

وَفِي الْبَابِ، عَنْ عَلِيٍّ، وَجَدِّ طَلْحَةَ بْنِ مُصَرِّفِ. حَدِيثُ الرُّبَيِّعِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَسَحَ بِرَأْسِهِ مَرَّةً. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ بَعْدَهُمْ وَبِهِ يَقُولُ: جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، وَسُفْيَانُ الثَّوْرِيُّ، وَابْنُ الْمُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ، رَأَوْا مَسْحَ الرَّأْسِ مَرَّةً وَاحِدَةً.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَال: سَمِعْتُ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ يَقُولُ: سَأَلْتُ جَعْفَرَ بْنَ مُحَمَّدٍ عَنْ مَسْحِ الرَّأْسِ أَيُجْزِئُ مَرَّةً؟ فَقَالَ: إِي وَاللَّهِ