Category: திர்மிதீ

Tirmidhi-2395

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்: 48

இறைநம்பிக்கையாளருடன் நட்பு கொள்வது தொடர்பாக வந்துள்ளவை.

2395. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

இந்த ஹதீஸ் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

இந்த ஹதீஸ் இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்திருப்பதாக நாம் அறிகிறோம்.


«لَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا، وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ»


Tirmidhi-2952

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2952. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

யார் குர்ஆனில் (அதனுடைய வசனங்களில், கருத்துகளில் தன் அறிவில் தோன்றியதை) சுயமாக பேசுகிறாரோ அவரின் கூற்று (எதார்த்தமாக) சரியாகவே இருந்தாலும் (மார்க்கத்தின் பார்வையில்) அவர் தவறிழைத்தவராவார்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த நபிமொழி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இதில் இடம்பெறும் (ஹஸ்ம் அல்குதயீ என்பவரின் சகோதரர்)-ஸுஹைல் பின் அப்துல்லாஹ்-இப்னு அபூஹஸ்ம் என்பவரைப் பற்றி நபிமொழி ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும் இவ்வாறே நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், அவர்களுக்குப் பின் வந்த அறிஞர் பெருமக்களில் சிலர், குர்ஆனுக்கு அதன் ஞானமின்றி சுய விளக்கம் தரக்கூடாது என்பதில் கடினமாக நடந்துகொண்டார்கள்.

தெரிந்துகொள்ளுங்கள்: முஜாஹித் (ரஹ்), கதாதா (ரஹ்) இவர்களைப் போன்ற மற்றுமுள்ள அறிஞர்கள் குர்ஆனுக்கு விளக்கமளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களில் எவரும் குர்ஆனுக்கு அதன் ஞானமின்றி, சுய விளக்கமளித்ததாகக் கருதவேண்டியதில்லை.

அவர்கள் அவ்வாறு குர்ஆனுக்கு

«مَنْ قَالَ فِي القُرْآنِ بِرَأْيِهِ فَأَصَابَ فَقَدْ أَخْطَأَ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الحَدِيثِ فِي سُهَيْلِ بْنِ أَبِي حَزْمٍ، وَهَكَذَا رُوِيَ عَنْ بَعْضِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ، أَنَّهُمْ شَدَّدُوا فِي هَذَا فِي أَنْ يُفَسَّرَ القُرْآنُ بِغَيْرِ عِلْمٍ وَأَمَّا الَّذِي رُوِيَ عَنْ مُجَاهِدٍ وَقَتَادَةَ وَغَيْرِهِمَا مِنْ أَهْلِ العِلْمِ أَنَّهُمْ فَسَّرُوا القُرْآنَ، فَلَيْسَ الظَّنُّ بِهِمْ أَنَّهُمْ قَالُوا فِي القُرْآنِ أَوْ فَسَّرُوهُ بِغَيْرِ عِلْمٍ أَوْ مِنْ قِبَلِ أَنْفُسِهِمْ. وَقَدْ رُوِيَ عَنْهُمْ مَا يَدُلُّ عَلَى مَا قُلْنَا، أَنَّهُمْ لَمْ يَقُولُوا مِنْ قِبَلِ أَنْفُسِهِمْ بِغَيْرِ عِلْمٍ»

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ البَصْرِيُّ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، قَالَ: «مَا فِي القُرْآنِ آيَةٌ إِلَّا وَقَدْ سَمِعْتُ فِيهَا شَيْئًا»

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الأَعْمَشِ، قَالَ: قَالَ مُجَاهِدٌ: «لَوْ كُنْتُ قَرَأْتُ قِرَاءَةَ ابْنِ مَسْعُودٍ لَمْ أَحْتَجْ أَنْ أَسْأَلَ ابْنَ عَبَّاسٍ عَنْ كَثِيرٍ مِنَ القُرْآنِ مِمَّا سَأَلْتُ»


Tirmidhi-2951

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2951. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடமிருந்து ஹதீஸ் அறிவிப்பதை பயந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு உறுதியாக தெரிந்ததைத் தவிர!

என்மீது யார் வேண்டுமென்றே (இட்டுக்கட்டி) பொய் சொல்வாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.

யார் குர்ஆனுக்கு சுயவிளக்கம் கூறுகிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த செய்தியாகும்.


«اتَّقُوا الحَدِيثَ عَنِّي إِلَّا مَا عَلِمْتُمْ،

فَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ،

وَمَنْ قَالَ فِي القُرْآنِ بِرَأْيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


Tirmidhi-2950

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அல்குர்ஆனுக்கு (அதன் ஞானமின்றி) சுயவிளக்கம் அளிப்பவனுக்குரிய தண்டனை குறித்து வந்துள்ளவை.

2950. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

யார் குர்ஆனில் (அதன் வசனங்கள் குறித்த) ஞானமின்றி (அதற்கு) சுயவிளக்கமளிக்கிறாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنْ قَالَ فِي القُرْآنِ بِغَيْرِ عِلْمٍ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


Tirmidhi-2378

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2378. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.


«الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ»


Tirmidhi-2311

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவதின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

2311. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும் நரகத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியும், நரகத்தின் புகையும் (ஒரு முஸ்லிமின் உடலில்) ஒன்று சேராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அபூரைஹானா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களின் குடும்பத்தாரின் அடிமையாவார். மேலும் இவர் மதீனாவைச் சேர்ந்தவரும், பலமானவரும் ஆவார். இவரிடமிருந்து ஷுஅபா (ரஹ்), ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) ஆகியோர் (ஹதீஸ்களை) அறிவித்துள்ளனர்.


«لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ»


Tirmidhi-1633

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

1633. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும் நரகத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியும், நரகத்தின் புகையும் (ஒரு முஸ்லிமின் உடலில்) ஒன்று சேராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களின் (குடும்பத்தாரின்) அடிமையாவார். மேலும் இவர் மதீனாவைச் சேர்ந்தவர் ஆவார்.


«لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ»


Tirmidhi-1669

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1669. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு துளிகளையும், இரு அடையாளங்களையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவை வேறு எதுவும் இல்லை. (அவ்விரு துளிகள்:)

1 . அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி.

2 . அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி.

அவ்விரு அடையாளங்கள்:

1 . அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் அடையாளம்.

2 . அல்லாஹ்வின் கடமைகளில் ஏதேனும் ஒரு கடமையை நிறைவேற்றும்போது ஏற்படும் அடையாளம்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

 


لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ، قَطْرَةٌ مِنْ دُمُوعٍ فِي خَشْيَةِ اللَّهِ، وَقَطْرَةُ دَمٍ تُهَرَاقُ فِي سَبِيلِ اللَّهِ، وَأَمَّا الأَثَرَانِ: فَأَثَرٌ فِي سَبِيلِ اللَّهِ، وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللَّهِ


Tirmidhi-604

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 72

மஃக்ரிப் தொழுகைக்குப்பின் தொழும் (கூடுதல்) தொழுகையை வீட்டில் தொழுவதே சிறந்தது என்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.

604. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தொழுகையை (உங்கள்) வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப்

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர்தொடரில் தவிர வேறு தொடர்களில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை. எனவே இது ‘ஃகரீப்’ வகை ஹதீஸ் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப்’ தொழுகைக்குப்பின் தமது வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவந்தார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸே ஆதாரபூர்வமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதுவிட்டு இஷா தொழுகைவரை பள்ளிவாசலில் தொழுதுகொண்டேயிருந்தார்கள்”
என ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், ‘மஃக்ரிப்’ தொழுகைக்குப் பின் பள்ளிவாசலில் இரண்டு

صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِ بَنِي عَبْدِ الأَشْهَلِ المَغْرِبَ، فَقَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِهَذِهِ الصَّلَاةِ فِي البُيُوتِ»


Tirmidhi-451

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

451. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களிலும் (சில தொழுகைகளைத்) தொழுங்கள்!; அவற்றை அடக்கத்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்!

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் உள்ள செய்தியாகும்.


«صَلُّوا فِي بُيُوتِكُمْ وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Next Page » « Previous Page