1104. ஹதீஸ் எண்-1103 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர்தொடரில் இது நபியின் சொல்லாக வரவில்லை. இதுதான் மிகச் சரியானதாகும்.
எனவே நபியின் சொல்லாக வந்துள்ள மேற்கண்ட ஹதீஸ் மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெறும் ஹதீஸ் அல்ல. ஏனெனில் இந்தக் கருத்தில் வரும் செய்திகளில், அப்துல்அஃலா —> ஸயீத் —> கதாதா —> ஜாபிர் பின் ஸைத் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் நபியின் சொல்லாக வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.
இந்தச் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில், அப்துல்அஃலா அவர்கள் வழியாக நபித்தோழர் (இப்னு அப்பாஸ்-ரலி) அவர்களின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே மிகச் சரியானது.
மேலும் கதாதா அவர்களின் மற்ற மாணவர்களும் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறே ஸயீத் பின் அபூஅரூபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது.
நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த தாபியீன்கள் மற்றும் பிற அறிஞர்கள் இதன் அடிப்படையிலேயே
نَحْوَهُ
சமீப விமர்சனங்கள்