அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கடமையான அல்லது உபரியான தொழுகைகளைத் தொழக்கூடியவர் அதில் “உம்முல் கிதாப் (அல்ஹம்து ஸூராவை)யும் அதனுடன் வேறொரு ஸூராவையும் ஓதிக் கொள்ளட்டும். அல்ஹம்து ஸூராவுடன் நிறுத்திக் கொண்டாலும் அது அவருக்குப் போதுமானதாகும். இமாம் சப்தமிட்டு ஓதும் போது, அவருடன் தொழக்கூடியவர் இமாம் நிறுத்துமிடங்களில் “அல்ஹம்து ஸூராவை” ஓதிக் கொள்ளட்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் அவருடைய தொழுகை குறை உடையதாகும். முழுமையற்றதாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(daraqutni-1223: 1223)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ , ثنا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ , ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ , ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ , عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ صَلَّى صَلَاةً مَكْتُوبَةً أَوْ تَطَوُّعًا فَلْيَقْرَأْ فِيهَا بِأُمِّ الْكِتَابِ وَسُورَةً مَعَهَا , فَإِنِ انْتَهَى إِلَى أُمِّ الْكِتَابِ فَقَدْ أَجْزَى , وَمَنْ صَلَّى صَلَاةً مَعَ إِمَامٍ يَجْهَرُ فَلْيَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي بَعْضِ سَكَتَاتِهِ , فَإِنْ لَمْ يَفْعَلْ فَصَلَاتُهُ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ».
مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ ضَعِيفٌ
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1223.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1063.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-40496-முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் என்பவர் பற்றி அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள், இவர் மிகப்பெரும் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும்; முன்கருல் ஹதீஸ் என்றும் கூறியுள்ளார். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் இவர் கைவிடப்பட்டவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: லிஸானுல் மீஸான்-6966, 7/227)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-841 .
சமீப விமர்சனங்கள்