தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-2694

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இறந்தப் பின் என்னை (என் கப்ரை) சந்திப்பவர் நான் உயிரோடிருக்கும்போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார். மேலும், (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவர்களில் (ஒருவராக) எழுப்பப்படுவார்.

அறிவிப்பவர் : ஹாத்திப் (ரலி)

(daraqutni-2694: 2694)

حَدَّثَنَا أَبُو عُبَيْدٍ , وَالْقَاضِي أَبُو عَبْدِ اللَّهِ , وَابْنُ مَخْلَدٍ , قَالُوا: نا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الْبُسْرِيُّ , نا وَكِيعٌ , نا خَالِدُ بْنُ أَبِي خَالِدٍ , وَأَبُو عَوْنٍ , عَنِ الشَّعْبِيِّ , وَالْأَسْوَدِ بْنِ مَيْمُونٍ , عَنْ هَارُونَ بْنِ أَبِي قَزَعَةَ , عَنْ رَجُلٍ مِنْ آلِ حَاطِبٍ , عَنْ حَاطِبٍ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ زَارَنِي بَعْدَ مَوْتِي فَكَأَنَّمَا زَارَنِي فِي حَيَاتِي , وَمَنْ مَاتَ بِأَحَدِ الْحَرَمَيْنِ بُعِثَ مِنَ الْآمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2694.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-2366.




إسناد ضعيف فيه هارون بن أبي قزعة المدني وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹாரூன் பின் அபூ கஸஆ பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

قال الأزدي : هارون أبو قزعة متروك، فكأنه عنى هذا.
لسان الميزان: (8 / 309)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும்.

  1. ஹாத்திப் (ரலி) வழியாக வரும் செய்தி:

பார்க்க : தாரகுத்னீ-2694 .

2 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : குப்ரா பைஹகீ-10273 , தயாலிஸீ-65 ,

3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-5883 , அல்முஃஜமுஸ் ஸகீர்-827 ,

4 . ஸல்மான் (ரலி) வழியாக வரும் செய்தி:

பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-6104 ,

5 . யஹ்யா பின் அப்துல்லாஹ் (ரஹ்) வழியாக வரும் செய்தி:

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6731 ,

6 . ஃகாலிப் பின் உபைதுல்லாஹ் வழியாக வரும் செய்தி:

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-17166 ,

இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:

பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-9409 , அல்முஃஜமுல் அவ்ஸத்-287 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.