தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-65

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

65. யார் எனது கப்ரை ஸியாரத் செய்கின்றாரோ அவருக்கு நான் பரிந்துரை செய்வேன் என்றோ (அல்லது)

யார் என்னை சந்திக்கின்றாரோ அவருக்கு நான் மறுமையில் சாட்சியாக இருப்பேன் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவரை, கியாமத் நாளில் அச்சமற்றவர்களில் (ஒருவராக) அல்லாஹ் எழுப்புவான் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

உமர் (ரலி)

عمر بن أبي سلمة بن عبد الرحمن بن عوف

உமர் பின் அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்.


உமர் பின் அபூஸலமா அவர்களை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

இவரைப் பற்றி ஷுஅபா, அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, யஹ்யா பின் ஸயீத், இப்னு ஸஃத், இப்னுல் மதீனீ, அபூஹாதிம், நஸாயீ, இப்னு குஸைமா போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இப்னு மயீன் அவர்கள், இவரை பலவீனமானவர் என்று கூறியதாக இப்னு அபூகைஸமா கூறியுள்ளார். (ஆனால் ஹுஷைம் இவரிடமிருந்து அறிவிப்பது பலவீனம் என்ற இப்னு மயீன் கூறியுள்ளார்)


இப்னு மயீன் அவர்கள், இவரை சுமாரானவர் என்ற தரத்தில் கூறியதாக அப்பாஸ் அத்தூரீ அவர்களும், இப்னு அபூகைஸமா அவர்களும் அறிவித்துள்ளனர்.

ஸுஹைர் பின் ஹர்ப் அவர்கள், இவரை ஸாலிஹ் என்று கூறியுள்ளார்.

அஹ்மத் அவர்கள், இவரை ஸாலிஹ் என்றும் பலமானவர் என்றும் கூறியுள்ளார்.

புகாரி அவர்கள், இவர் ஸதூக்-நடுத்தரமானவர் என்றும் சில ஹதீஸ்களில் மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

இஜ்லீ, இப்னு அதீ போன்றோர் இவரை நடுத்தரமானவர் என்று கூறியுள்ளனர்.

இப்னு ஹஜர் அவர்கள், இவர் ஸதூக்-நடுத்தரமானவர், சில செய்திகளில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.


حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا سَوَّارُ بْنُ مَيْمُونٍ أَبُو الْجَرَّاحِ الْعَبْدِيُّ، قَالَ: حَدَّثَنِي رَجُلٌ مِنْ آلِ عُمَرَ، عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَنْ زَارَ قَبْرِي» أَوْ قَالَ: «مَنْ زَارَنِي كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا وَمَنْ مَاتَ فِي أَحَدِ الْحَرَمَيْنِ بَعَثَهُ اللَّهُ فِي الْآمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ»


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-65.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-64.



إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا سوار بن ميمون العبدي وهو انفرد بتوثيقه ابن حبان

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸவ்வார் பின் மைமூன் அறியப்படாதவர். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அறியப்படாதவர்களையும் பலமானவர்களின் பட்டியலில் சேர்க்கும் வழமையுள்ளவர் என்பதால் இவரின் கூற்று ஸவ்வார் பின் மைமூன் விசயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.
  • மேலும் இதில் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் உமர் (ரலி) அவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒரு மனிதர் யார் என்பது பற்றிய தெளிவு இல்லை. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : தாரகுத்னீ-2694 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.