தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1488

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(ஸுனன் தாரிமீ: 1488)

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ زَكَرِيَّا بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1488.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1419.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


இந்தச் செய்தியை ஸகரிய்யா பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மிகப் பலமான, அதிகமான, அவர் ஊரைச் சேர்ந்தவர்கள் அம்ர் பின் தீனார் —> அதாஉ பின் யஸார் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை ஸகரிய்யா பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஆஸிம்-ளஹ்ஹாக் பின் மக்லத் மட்டும் மேற்கண்டவாறு அம்ர் பின் தீனார் —> ஸுலைமான் பின் யஸார் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். எனவே இதன் அறிவிப்பாளர்தொடர் தவறாகும். கருத்து சரியானதே.


மேலும் பார்க்க: முஸ்லிம்-1281.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.