தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-2066

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

உணவு உண்ட பின் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடித்த பின், அல்லது பருகிய பின் ‘அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி, ஃகைர மக்ஃபூரின், வலா முவத்தஇன், வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பினா’ என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் மறுக்கப்படாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.)

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(ஸுனன் தாரிமீ: 2066)

بَابُ الدُّعَاءِ بَعْدَ الْفَرَاغِ مِنَ الطَّعَامِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ الْأَسَدِيُّ، حَدَّثَنَا ثَوْرٌ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ، أَوْ شَرِبَ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفُورٍ، وَلَا مُوَدَّعٍ، وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبِّنَا»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-2066.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1963.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-37939-முஹம்மது பின் காஸிம் அல்அஸதீ என்பவர் பற்றி இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர், இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறியுள்ளனர். அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் மட்டுமே இவரைப் பற்றி ஸதூக்-நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியதாக இப்னு அபூகைஸமா அறிவித்துள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவரை பொருந்திக்கொள்ளவில்லை என்று ஸாஜீ கூறியுள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவரை பொருந்திக்கொள்ளவில்லை-ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு காரணம் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் அல்ல. இவரின் கவனக்குறைவு காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன் என்று முஹம்மது பின் அப்பாஸ் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/678, தக்ரீபுத் தஹ்தீப்-1/889, அல்இக்மால்-10/315)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-5458 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.