தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7257

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

7257. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெற்றோருக்கு நன்மை செய்பவருக்கு நல்வாழ்த்துகள்! அவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!

அறிவிப்பவர் : (ரலி)

முஆத் பின் அனஸ் (ரலி)

معاذ بن أنس الجهني

இறப்பு: அஸ்ஃபான்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: முஆத் இப்னு அனஸ் அல்ஜுஹனீ

தந்தை பெயர்: அனஸ்

வம்சம்: அல்ஜுஹனீ, அல்அன்ஸாரீ

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, எகிப்து, ஷாம், அஸ்ஃபான்

பிறப்பு: மதீனா

இறப்பு: அஸ்ஃபான்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

முஆத் இப்னு அனஸ் அல்ஜுஹனீ ரலி அவர்கள் ஒரு நபித்தோழர் ஆவார். இவர் மதீனாவிலும் எகிப்திலும் வசித்தார். நபி (ஸல்), அபூ தர்தா, கஅப் அல்அக்பார் ஆகியோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

இவரிடமிருந்து இவரின் மகன் ஸஹ்ல் பின் முஆத் பின் அனஸ் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவர் அஸ்ஃபான் என்ற இடத்தில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூ தர்தா, கஅப் அல்அக்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸஹ்ல் பின் முஆத் பின் அனஸ்


ஆதாரம்: muslimscholars.info (5296) · Should verify


حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثَنَا يَحْيَى بْنُ نَصْرٍ الْخَوْلَانِيُّ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ زَبَّانَ بْنِ فَائِدٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ، عَنْ أَبِيهِ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ بَرَّ وَالِدَيْهِ طُوبَى لَهُ زَادَ اللَّهُ فِي عُمْرِهِ»

هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7257.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7322.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஸப்பான் பின் ஃபாயித் நல்லமனிதர் என்றாலும் பலவீனமானவர்; மேலும் ராவி ஸஹ்ல் பின் முஆத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1494 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.