தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7256

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் மிம்பரைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அதனை கொண்டு வந்து வைத்தோம். அவர்கள் முதல் படியில் ஏறும் போதும் ”ஆமீன்” என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும் போதும் ”ஆமீன்” என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும்போதும் ”ஆமீன்” என்று கூறினார்கள். அவர்கள் இறங்கியபோது நாங்கள் ” அல்லாஹ்வின் தூதரே நாங்கள் இதுவரை கேட்டிராத ஒரு விஷயத்தை உங்களிடமிருந்து இன்று கேட்டோமே” என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் ” ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு காட்சி தந்து ” எவன் ரமலான் மாதத்தை அடைந்தும் அவனுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படவில்லையோ அவனுக்கு (இறையருள்) தூரமாகட்டும்” என்று கூறினார்கள். நான் ”ஆமீன்” (இறைவா இதை ஏற்றுக் கொள்வாயாக) என்று கூறினேன்.

இரண்டாவது படியில் நான் ஏறும்போது ”யாரிடம் (நபியாகிய) நீங்கள் நினைவு கூறப்பட்டும் உங்கள் மீது அவன் ஸலவாத்து சொல்லவில்லையோ அவனுக்கு (இறையருள்) தூரமாகட்டும்” என்று கூறினார்கள். நான் ”ஆமீன்” என்று கூறினேன். நான் மூன்றாவது படியில் ஏறும்போது ” எவனிடம் அவனுடைய பெற்றோர்கள் இருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமைப் பருவத்தை அடைந்து (அவர்களுக்குப் பணிவிடை செய்வதின் மூலம் ) அவன் சொர்க்கம் செல்லவில்லையோ அவனுக்கு (இறையருள்) தூரமாகட்டும்” என்று கூறினார்கள். நான் ”ஆமீன்” என்று கூறினேன்.

அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)

(ஹாகிம்: 7256)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَالِحٍ، وَإِبْرَاهِيمُ بْنُ عِصْمَةَ، قَالَا: ثَنَا السَّرِيُّ، عَنْ خُزَيْمَةَ، ثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، ثَنَا مُحَمَّدُ بْنُ هِلَالٍ، حَدَّثَنِي سَعْدُ بْنُ إِسْحَاقَ بْنِ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«احْضَرُوا الْمِنْبَرَ» فَحَضَرْنَا فَلَمَّا ارْتَقَى دَرَجَةً قَالَ: «آمِينَ» ، فَلَمَّا ارْتَقَى الدَّرَجَةَ الثَّانِيَةَ قَالَ: «آمِينَ» فَلَمَّا ارْتَقَى الدَّرَجَةَ الثَّالِثَةَ قَالَ: «آمِينَ» ، فَلَمَّا نَزَلَ قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ لَقَدْ سَمِعْنَا مِنْكَ الْيَوْمَ شَيْئًا مَا كُنَّا نَسْمَعُهُ قَالَ: ” إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَرَضَ لِي فَقَالَ: بُعْدًا لِمَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يَغْفَرْ لَهُ قُلْتُ: آمِينَ، فَلَمَّا رَقِيتُ الثَّانِيَةَ قَالَ: بُعْدًا لِمَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ قُلْتُ: آمِينَ، فَلَمَّا رَقِيتُ الثَّالِثَةَ قَالَ: بُعْدًا لِمَنْ أَدْرَكَ أَبَوَاهُ الْكِبَرَ عِنْدَهُ أَوْ أَحَدُهُمَا فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ قُلْتُ: آمِينَ

«هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-7256.
Hakim-Shamila-7256.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7321.




  • இந்த ஹதீஸை ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் அறிவிப்பாளர் தொடர் சரியானது என்று கூறினாலும், தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்றோர் இந்த கருத்தில் இருந்தாலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் இஸ்ஹாக் பின் கஃப் என்பவர் அறியப்படாதவர் என்று இப்னுல் கத்தான், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/126, தக்ரீபுத் தஹ்தீப்-1/131)

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-315 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.