தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7728

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனது பாட்டனார் எனது தந்தைக்கு  அஸீஸ் (மிகைத்தவர்) என்று பெயர் வைத்தார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர் வைத்தார்கள்.

(ஹாகிம்: 7728)

أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَسَنِ الْقَاضِي، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحُسَيْنِ، ثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، ثَنَا شُعْبَةُ، وَأَخْبَرَنِي أَبُو عُمَرَ بْنُ مَطَرٍ، الْعَدْلُ، ثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْبَخْتَرِيُّ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، ثَنَا أَبِي، ثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ خَيْثَمَةَ:

«أَنَّ جَدَّهُ سَمَّى أَبَاهُ عُزَيْزًا فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمَّاهُ عَبْدَ الرَّحْمَنِ»

صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7728.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7794.




  • இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடரில் முதல் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர்ரஹ்மான் பின் ஹஸன் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் அது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

இரண்டாவது அறிவிப்பாளர்தொடர் முர்ஸல் என்றாலும் வேறு அறிவிப்பாளர்தொடரில் கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) தன் தந்தையிடமிருந்து இந்த செய்தியை அறிவித்திருப்பதால் இந்த செய்தி சரியானதாகும்.

பார்க்க : அஹ்மத்-17604 .

2 comments on Hakim-7728

  1. அவரின் பாட்டனாருக்கு உசைர் என்று தான் பெரியரிடப்பட்டது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.