தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-8716

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“மறுமை நாள் ஏற்படும் போது, தோல் விரிக்கப்படுவதைப் போல பூமி விரிக்கப்படும். அல்லாஹ் மனிதர்கள், ஜின்கள், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் என அனைத்துப் படைப்புகளையும் ஒன்று திரட்டுவான்.

அந்நாளில், கால்நடைகளுக்கு இடையிலான அநீதிகளுக்கு அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். எந்தளவுக்கென்றால், கொம்புள்ள ஆடு கொம்பில்லாத ஆட்டை முட்டியிருந்தால், அதற்காக கொம்பில்லாத ஆடு (கொம்புள்ள ஆட்டை) பழிவாங்கும்.

கால்நடைகளுக்கு இடையிலான தீர்ப்புகளை அல்லாஹ் முடித்ததும், அவற்றிடம் ‘நீங்கள் மண்ணாகி விடுங்கள்’ என்று கூறுவான். அவை மண்ணாகிவிடும். இதைக் காணும் இறைமறுப்பாளன், ‘அந்தோ! நானும் மண்ணாகிப் போயிருக்கக் கூடாதா!’ என்று (ஏக்கத்துடன்) கூறுவான்.

அறிவிப்பவர்: அபுல்முஃகீரா அல்கவ்வாஸ் (ரஹ்)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில்  அபுல்முஃகீரா என்பவரைத் தவிர அனைவரும் பலமானவர்கள். அபுல்முஃகீரா என்பவர் அறியப்படாதவர் ஆவார். என்றாலும், ஒரு நபித்தோழர் குர்ஆன் வசனத்திற்கு அளிக்கும் இது போன்ற விளக்கங்கள் ‘முஸ்னத்’ (நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டது) என்ற தரத்தைப் பெறும்.

(ஹாகிம்: 8716)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الصَّفَّارُ، ثَنَا أَحْمَدُ بْنُ مِهْرَانَ، ثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، أَنْبَأَ عَوْفٌ، عَنْ أَبِي الْمُغِيرَةِ الْقَوَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:

” إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ مُدَّتِ الْأَرْضُ مَدَّ الْأَدِيمِ وَحَشَرَ اللَّهُ الْخَلَائِقَ الْإِنْسَ وَالْجِنَّ وَالدَّوَابَّ وَالْوُحُوشَ فَإِذَا كَانَ ذَلِكَ الْيَوْمُ جَعَلَ اللَّهُ الْقِصَاصَ بَيْنَ الدَّوَابِّ حَتَّى تَقُصَّ الشَّاةُ الْجَمَّاءُ مِنَ الْقَرْنَاءِ بِنَطْحَتِهَا فَإِذَا فَرَغَ اللَّهُ مِنَ الْقِصَاصِ بَيْنَ الدَّوَابِّ قَالَ لَهَا: كُونِي تُرَابًا، فَتَكُونُ تُرَابًا فَيَرَاهَا الْكَافِرُ فَيَقُولُ: يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا

«رُوَاتُهُ عَنْ آخِرِهِمْ ثِقَاتٌ غَيْرَ أَنَّ أَبَا الْمُغِيرَةِ مَجْهُولٌ، وَتَفْسِيرُ الصَّحَابِيُّ مُسْنَدٌ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-8716.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-8817.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்-முஹம்மத் பின் அப்துல்லாஹ்

2 . முஹம்மத் பின் அப்துல்லாஹ்-அஸ்ஸஃப்பார்

3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் மிஹ்ரான்-அல்அஸ்பஹானீ

4 . ரவ்ஹ் பின் உபாதா-அல்கைஸீ

5 . அவ்ஃப் பின் அபூஜமீலா-அல்அஃராபீ

6 . அபுல்முஃகீரா-அல்கவ்வாஸ்

7 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)-அஸ்ஸஹ்மீ


الجرح والتعديل – ابن أبي حاتم (9/ 439):
2203 – ‌أبو ‌المغيرة ‌القواس ‌روى ‌عن ‌عبد ‌الله ‌بن ‌عمرو (1) روى عنه عوف سمعت أبي يقول ذلك.
نا عبد الرحمن قال سئل أبو زرعة عن [اسم – 2] ابى المغيرة القواس قال: لااعلم احدا يسميه.
نا عبد الرحمن نا صالح بن أحمد [بن محمد – 2] بن حنبل نا علي – يعني ابن المديني – قال قلت ليحيى بن سعيد: أبو المغيرة القواس؟ قال كان اشر عنده – يعنى عند سليمان التيمى – من عبد الله بن شقيق، قال يحيى: ولم ار احدا عرف ابا المغيرة غيره.
نا عبد الرحمن أنا أبو بكر بن أبي خيثمة فيما كتب إلي نا إبراهيم بن عرعرة نا يحيى بن سعيد قال: ضعف سليمان التيمى ابا المغيرة القواس.
نا عبد الرحمن قال ذكره أبي عن إسحاق بن منصور عن يحيى بن معين أنه قال: أبو المغيرة القواس ثقة.

அபுல்முஃகீரா அல்கவ்வாஸ் குறித்த ஆய்வுத் தகவல்கள்:

1 . இவர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து அவ்ஃப் அவர்கள் ஹதீஸ்களைக் கேட்டு அறிவித்துள்ளார் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார்.

2 . பெயர் பற்றிய தகவல்:

இவருடைய இயற்பெயர் என்னவென்று அபூஸுர்ஆவிடம் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “இவருக்கு இன்னதுதான் பெயர் என்று எவரும் குறிப்பிட்டதாக நான் அறியவில்லை” என்று அவர் பதிலளித்தார். (அதாவது இவர் தனது புனைப்பெயராலே அறியப்படுகிறார்).

3 . இவரைப் பற்றிய விமர்சனம்:

இவரைப் பற்றி நான் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களிடம் கேட்டேன்: அதற்கவர், “இவரைப் பற்றி ஸுலைமான் அத்தைமீ அவர்கள், இவர் அப்துல்லாஹ் பின் ஷகீக் என்பவரை விடவும் மோசமானவர் என்று கூறியதாகவும், இவரைப் பற்றி ஸுலைமான் அத்தைமீ அவர்களைத் தவிர வேறு யாரும் அறிந்ததாக நான் காணவில்லை” என்று கூறியதாகவும் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் கூறியுள்ளார்.

இவரை ஸுலைமான் அத்தைமீ அவர்கள் பலவீனமானவர் என்று கூறியதாக யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
குறிப்பிட்டார் என இப்ராஹீம் பின் அர்அரா அவர்கள் அறிவித்துள்ளார்.

4 . இவரைப் பற்றி பாராட்டியவர்கள்:

அபுல்முஃகீரா அல்கவ்வாஸ் பலமானவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியதாக இஸ்ஹாக் பின் மன்ஸூர் அவர்கள் அறிவித்துள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/439)


مختصر تلخيص الذهبي لمستدرك الحاكم (7/ 3517):
قلت: الراجح من حال أبي المغيرة أنه ثقة، وثقه ابن معين، وذكره ابن حبان في ثقاته، وأما الحاكم فإنه إن لم يعرفه، فقد عرفه ابن معين، وأما سليمان بن طرخان التيمي فإنه قد ضعف أبا المغيرة كما قاله يحيى بن سعيد القطان عنه، لكن سليمان التيمي هذا ليس من أهل الجرح والتعديل كما قاله الحافظ ابن حجر في التهذيب (9/ 45)، ولم يذكره الذهبي في “ذكر من يعتمد قوله في الجرح والتعديل”، والله أعلم.

தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களின் தல்கீஸ் நூலுக்கு விளக்கவுரை தந்துள்ள ஸஃத் பின் அப்துல்லாஹ் எனும் அறிஞர் கூறுகிறார்:

இந்தச் செய்தியில் இடம்பெறும் அபுல்முஃகீரா என்பவரின் நிலையைப் பொறுத்தவரை, அவர் பலமானவர் என்பதே சரியான கருத்தாகும். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், இவரை பலமானவர் என உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் தனது ‘அஸ்ஸிகாத்’ எனும் நூலில் பலமானவர்களின் பட்டியலில் இவரைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் இவரை அறியப்படாதவர் எனக் குறிப்பிட்டிருந்தாலும், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் இவரைப் பற்றி அறிந்துள்ளார்.

ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ அவர்கள் அபுல்முஃகீராவை ‘பலவீனமானவர்’ எனக் கூறியதாக யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான் அவர்கள் கூறியிருந்தாலும் இந்த ஸுலைமான் அத்தைமீ என்பவர் வேறு ஒரு அறிவிப்பாளரை விமர்சித்த விசயத்தில் இவர் அறிவிப்பாளர் ஆய்வுத்துறையில் வல்லுநர் கிடையாது என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

تهذيب التهذيب (3/ 507):
وأما سليمان التيمي فلم يتبين لي لأي شيء تكلم فيه، والظاهر أنه لأمر غير الحديث، لأن سليمان ‌ليس ‌من ‌أهل ‌الجرح ‌والتعديل.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/507)

மேலும் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் ‘திக்ரு மய் யுஃதமது கவ்லுஹு ஃபில் ஜர்ஹி வத்தஃதீல்-யார் யாரது விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்’ என்ற தன் நூலில் ஸுலைமான் அத்தைமீ அவர்களைச் சேர்க்கவில்லை. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

(நூல்: முக்தஸரு தல்கீஸித் தஹபீ-அடிக்குறிப்பு-7/3517)


2 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …


மேலும் பார்க்க: முஸ்லிம்-5038.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.