தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்றால் என்ன?

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஒரு ஹதீஸை ஸஹீஹ்-சரியானது என சொல்வதாக இருந்தால் அதில் ஐந்து நிபந்தனைகள் இருக்க வேண்டும்.

1 . اتصال السند – அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்படாமல் இருக்க வேண்டும்.

2 . عدالة الرواة – அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.

3 . ضبط الرواة – அறிவிப்பாளர்கள் நினைவாற்றலில் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். (நூலில் ஹதீஸை எழுதிவைத்தவர் என்றால் அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்)

4 . عدم الشذوذ – குறிப்பிட்ட செய்தி மற்ற மிக பலமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருக்கக் கூடாது.

5 . عدم العلة – வேறு நுணுக்கமான குறைபாடு இருக்கக் கூடாது.

ஹஸன் தர ஹதீஸ்கள்

ஆரம்பக்கால ஹதீஸ்கலை அறிஞர்கள் ஹதீஸ்களை இருவகையாக மட்டுமே குறிப்பிடுவர்.

1 . ஸஹீஹ்-சரியானது (மக்பூல்-ஏற்கத்தக்க ஹதீஸ்)

2 . ளயீஃப்-பலவீனமானது (மர்தூத்-ஏற்கத்தகாத ஹதீஸ்)

பலவீனமான ஹதீஸ் இரு வகை:

1 . சில காரணங்களால் அந்த பலவீனம் நீங்கி விடும். எனவே இந்தவகை செய்திகளை ஏற்று அமல் செய்யலாம்.

2 . எந்த நிலையிலும் பலவீனம் நீங்காத செய்திகள். இவைகளை ஏற்று அமல் செய்யக்கூடாது.

பிறகு, மேற்கண்ட 5 நிபந்தனைகளில் ஏற்படும் குறை, நிறைகளை வைத்து அதாவது அறிவிப்பாளர்தொடரில் அல்லது அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை, நினைவாற்றல் போன்றவற்றில் ஏற்படும் குறை நிறைகளை வைத்து ஹதீஸ்களை பலவகைகளாக பிரித்தனர். இவற்றில் ஒன்று தான் ஹஸன் தரம் என்ற வகை.


ஹஸன் தர ஹதீஸ் என்பதற்கு இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் கூறியுள்ள தஃரீஃப் (வரைவிலக்கணம்):

ஹஸன் தர செய்திகள் இரு வகை.

1 . ஹஸன் லிதாதிஹீ, 2 . ஹஸன் லிஃகைரிஹீ

خبر الآحاد بنقل عدل تام الضبط، متصل السند، غير معلل ولا شاذ: هو الصحيح لذاته

فإن خف الضبط: فالحسن لذاته

ومتى توبع السيِّئ الحفظ بمعتبر: كأن يكون فوقه، أو مثله، لا دونه، وكذا المختلط الذي لم يتميز، والمستور، والإسناد المرسل، وكذا المدلس إذا لم يعرف المحذوف منه صار حديثهم حسنا، لا لذاته، بل وصفه بذلك باعتبار المجموع، من المتابِع والمتابَع

(ஒரு ஹதீஸில் நாம் மேற்கூறிய) 5 நிபந்தனைகள் இருந்தால் அது ஸஹீஹுன் லிதாதிஹீ-(வேறு சான்று தேவைப்படாமல் தன்னளவிலேயே) சரியான செய்தியாகும்.

1 . ஹஸன் லிதாதிஹீ

(அறிவிப்பாளர்தொடரில் மூன்றாவது நிபந்தனையான “அறிவிப்பாளர்கள் நினைவாற்றலில் உறுதியானவர்களாக இருக்க வேண்டும்” என்பதில் சிறிது பாதிப்பு ஏற்பட்டால் அதாவது) சுமாரான நினைவாற்றல் உள்ள ஒருவர் இடம்பெற்றாலும் அது ஹஸன் லிதாதிஹீ (வேறு சான்று தேவைப்படாமல் தன்னளவிலேயே ஹஸன்) தரமாகும்.

2 . ஹஸன் லிஃகைரிஹீ

1 . நினைவாற்றல் சரியில்லாதவர் இடம்பெறும் செய்தி (இத்துடன் அதிகம் தவறிழைக்காதவராக இருக்க வேண்டும்);

2 . மூளைக்குழம்பியவர் இடம்பெறும் செய்தி;

(ஆரம்பத்தில் பலமானவராக இருந்து பிறகு மூளைக்குழம்பிய பின் ஒருவர் அறிவிக்கிறார். இவரிடமிருந்து கேட்டவர்கள், இவர் மூளைக் குழம்புவதற்கு முன் இவரிடமிருந்து ஹதீஸைக் கேட்டனரா? அல்லது மூளைக் குழம்பியப் பின் ஹதீஸைக் கேட்டனரா? என்று தெரியமுடியாத நிலையில் இருக்கிறது)

3 . ஹதீஸ்கலை அறிஞர்களால் பலமானவர் என்றோ அல்லது பலவீனமானவர் என்றோ (குறையோ, நிறையோ) கூறப்படாதவர் இடம்பெறும் செய்தி;

4 . முர்ஸலான அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ள செய்தி;…

5 . தத்லீஸ் செய்பவர் இடம்பெறும் செய்தி;

(இடையில் விடுப்பட்டவர் யார் என்று தெரியமுடியாத நிலையில் இருக்கிறது)

  • 1 . இந்த 5 வகையான செய்திகளின் கருத்து (இதே தரத்தில் அமைந்த வேறு அறிவிப்பாளர்தொடரில் வந்தால் இவை ஹஸன் லிஃகைரிஹீ-வேறு சான்றால் ஹஸன் என்ற தரத்தை அடையும்.
  • 2 . இதைவிட உயர்ந்த தரத்தில் அதாவது சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்தால் இவை ஸஹீஹுன் லிஃகைரிஹீ என்ற தரத்தை அடையும்.
  • 3 . ஹஸன் லிதாதிஹீ தரத்தில் அமைந்த செய்தியின் கருத்தில், மற்றொரு ஹஸன் லிதாதிஹீ தரத்தில் அமைந்த செய்தி வந்தால் அதுவும் ஸஹீஹுன் லிஃகைரிஹீ என்றும்,
  • 4 . ஹஸன் லிதாதிஹீ தரத்தில் அமைந்த செய்தியின் கருத்தில், சரியான ஹதீஸின் தரத்தில் அமைந்த செய்திவந்தால் அதுவும் ஸஹீஹுன் லிஃகைரிஹீ என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.

(நூல்: நுக்பதுல் ஃபிக்ர், நுஸ்ஹதுன் நள்ர்)

(இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், சுமாரான நினைவாற்றல் உள்ளவர் என்பதற்கு பொதுவான ஒரு வரைவிலக்கணத்தை கூறவில்லை. அவரின் நூல்களை ஆய்வு செய்வதின் மூலம் எந்தெந்த வகையினரை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

1 . صدوق ஸதூக் – நம்பகமானவர் (உண்மையாளர்).

2 . صدوق يهم ஸதூக், யஹிமு – நம்பகமானவர்; சில இடத்தில் தவறு செய்தவர்.

3 . صدوق سيء الحفظ ஸதூக், ஸய்யிஉல் ஹிஃப்ள்- நம்பகமானவர்; நினைவாற்றல் சரியில்லாதவர்.

4 . صدوق يخطئ ஸதூக், யுக்திஉ – நம்பகமானவர்; தவறிழைப்பவர்.

5 .  صدوق له أوهام ஸதூக், லஹூ அவ்ஹாம், رمي باتشيع ருமிய பித்தஷய்யுஃ- நம்பகமானவர்; சில இடத்தில் தவறு செய்துள்ளார்; ஷீஆ அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்ற சொல் (شيعة علي ஷீஅது அலீ) “அலீயை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர். இவர்கள் பல பிரிவினராக உள்ளனர். பல விசயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு-குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோருக்கு மாறுபடுகின்றனர். அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.கொள்கையுடையவர் என்று விமர்சிக்கப்பட்டவர்.

6 . صدوق خلط بآخرة. ஸதூக், கலத பிஆகிரஹ், ورمي بالارجاء வ ருமிய பில்இர்ஜாஃ- நம்பகமானவர்; இறுதிக் காலத்தில் மூளை குழம்பியவர்; முர்ஜிஆ கொள்கையுடையவர் என்று விமர்சிக்கப்பட்டவர்.

7 . لين الحديث லீனுல் ஹதீஸ் – ஹதீஸில் சிறிது பலவீனமானவர்.

8 . فيه لين  ஃபீஹி லீனுன் – இவரிடம் சிறிது பலவீனம் உள்ளது.

9 .  فيه مقالஃ பீஹி மகால்- இவர் விசயத்தில் சிறிது விமர்சனம் உள்ளது.

10 . في حديثه ضعف ஃபீ ஹதீஸிஹீ ளுஃ-ப், (ளஅஃப்)- இவரின் ஹதீஸில் பலவீனம் உள்ளது.

11 .  ضعيف பலவீனமானவர் என்று கூறப்பட்ட சில குறிப்பட்ட அறிவிப்பாளர்கள் விசயத்தில் மட்டும்.

12 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறியிருந்து அவரைப் பற்றி மற்றவர்களின் விமர்சனம் இல்லாமல் இருந்து, அவரிடமிருந்து இருவர் அறிவித்திருந்தால்.

13 . ஒருவரை சிலர் அறியப்படாதவர் என்று கூறியிருக்க, அவர் இடம்பெறும் செய்தியை நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் பதிவு செய்தால் அந்த செய்தியை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஹஸன் தரம் என்று கூறுவார். காரணம் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் அறியப்படாதவர் இடம்பெறும் செய்தியை பதிவு செய்யமாட்டேன் என்ற நிபந்தனையை கூறியுள்ளார்.

14 . முஹம்மது பின் இஸ்ஹாக், ஷஹ்ர் பின் ஹவ்ஷப், முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா, அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் (அபூஸாலிஹ்-லைஸ் அவர்களின் எழுத்தாளர்), பகிய்யது பின் வலீத் (தனது ஆசிரியரிடமிருந்து கேட்டதாக தெளிவு படுத்தி இருந்தால்)

இறுதியாக கூறப்பட்ட இந்த ஐந்து பேர் இடம்பெறும் செய்திகளையும், மேற்கண்ட மற்ற 13 வகையினரையும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்)

ஆதார நூல்: ரிஜாலுல் ஹதீஸில் ஹஸன் லிதாதிஹீ இன்தல் ஹாஃபில் இப்னி ஹஜர். (ஹதீஸ்கலை ஆசிரியர்: ஹாதிம் ஸயீத்-ஸஊதி அரேபியா)


  • இவ்வாறு இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் ஹதீஸ் வகைகளில் ஹஸன் என்ற ஒரு தரத்தை கூறியிருப்பது புதிய விசயமல்ல.

இவருக்கு முன்னால் வந்த திர்மிதீ இமாம் அவர்கள், ஹஸன் என்பதற்கு தனிப்பட்ட வரைவிலக்கணம் கூறியுள்ளார். மேலும் தனது ஜாமிஉத் திர்மிதீ என்ற நூலில் இதைக் கையாண்டதால் தான் ஹஸன் தரம் என்பது மக்களிடம் பிரபலமானது. (அதற்கு முன்னால், சில ஹதீஸ்கலை அறிஞர்கள் நடத்தும் ஹதீஸ்பாடங்களிலும், தன்னிடம் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்களில் மட்டுமே இருந்துள்ளது)

1 . ஹஸன் என்பதற்கு திர்மிதீ இமாம் கூறியுள்ள வரைவிலக்கணம்:

كلُّ حديث يُرْوى لا يكون في إسناده من يُتَّهم بالكذب، ولا يكون الحديث شاذًا، ويُرْوى من غير وجه نحو ذلك، فهو عندنا حديث حسن

  • அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறுவோர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்களாக இருக்கக் கூடாது.
  • ஷாத்தாக இருக்கக் கூடாது.
  • இதே போன்ற செய்தி அல்லது இந்தக் கருத்தில் வேறு அறிவிப்பாளர்தொடர் வந்திருக்க வேண்டும்.

இந்த 3 நிபந்தனை இருந்தால் அது நம்முடைய பார்வையில் ஹஸன் தரம் என்று திர்மிதீ இமாம் கூறியுள்ளார்.

திர்மிதீ இமாம் கூறும் வரைவிலக்கணம் அவரின் கருத்தாகும். இது இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிடும் ஹஸன் லிஃகைரிஹீ  என்ற வகைக்கே பொருத்தமாகும். ஹஸன் லிதாதிஹீ என்பதற்கு பொருத்தமாகாது. ஏனெனில் இந்த வகையின் அறிவிப்பாளர்களின் தரம் வேறு; மேலும் இந்த வகைக்கு வேறு அறிவிப்பாளர்தொடர் வந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை.

  • எனவே திர்மிதீ இமாம், தனது ஜாமிஉத் திர்மிதீயில் ஒரு செய்தியை ஹஸன் என்று கூறினால் அது ஹஸன் லிஃகைரிஹீ ஆகும்.
  • திர்மிதீ இமாம், ஹஸன் என்பதுடன் வேறு சில வார்த்தைகளை உதாரணமாக ஸஹீஹ், ஃகரீப் போன்ற வார்த்தைகளை இணைத்துக் கூறினால் அதன் பொருள் வேறு என்றும் ஹதீஸ்கலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது தனி தலைப்பாகும்.

النكت على كتاب ابن الصلاح لابن حجر(1/ 144):

وأما علي بن المديني، فقد أكثر من وصف الأحاديث بالصحة والحسن في مسنده وعلله، فظاهر عبارته قصد المعنى الاصطلاحي وكأنه الإمام السابق لهذا الاصطلاح، وعنه أخذ البخاري ويعقوب بن شيبة وغير واحد”.

ثم ذكر مثالين من جامع الترمذي والعلل الكبير له حكم البخاري عليهما بالحسن أحدهما لذاته والآخر لغيره.

ثم قال: “فبان أن استمداد الترمذي لذلك إنما هو من البخاري، ولكن الترمذي أكثر منه وأشاد بذكره وأظهر الاصطلاح فيه فصار أشهر من غيره”

திர்மிதீ இமாம் சில செய்திகள் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாமிடம் கேட்கும் போது, அது ஹஸன் தரத்தில் உள்ள செய்தி என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார். இந்த வழக்குச் சொல்லை இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களிடமிருந்து தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம், யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
போன்ற பலர் கேட்டுள்ளனர். எனவே ஹஸன் என்ற வழக்குச் சொல் திர்மிதீ இமாம் புதிதாக பயன்படுத்தியது அல்ல என்ற கருத்தை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அன்னுகது அலா கிதாபி இப்னுஸ் ஸலாஹ்-1/144)

ஹஸன் லிஃகைரிஹீ வகைப் பற்றி பொதுவான ஒரு சட்டம்.

الكفاية في علم الرواية للخطيب البغدادي (ص133):
أَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ ، قَالَ: أنا عَبْدُ اللَّهِ بْنُ عَدِيٍّ، ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ الْغَزِّيُّ، ثنا أَبِي، حَدَّثَنَا رَوَّادُ بْنُ الْجَرَّاحِ ، قَالَ: سَمِعْتُ سُفْيَانَ الثَّوْرِيَّ ، يَقُولُ: «لَا تَأْخُذُوا هَذَا الْعِلْمَ فِي الْحَلَالِ وَالْحَرَامِ إِلَّا مِنَ الرُّؤَسَاءِ الْمَشْهُورِينَ بِالْعِلْمِ ، الَّذِينَ يَعْرِفُونَ الزِّيَادَةَ وَالنُّقْصَانَ ، وَلَا بَأْسَ بِمَا سِوَى ذَلِكَ مِنَ الْمَشَايِخِ»

الكفاية في علم الرواية للخطيب البغدادي (ص134):
أَخْبَرَنَا أَبُو بَكْرٍ الْبَرْقَانِيُّ ، قَالَ: أنا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ مُحَمَّدٍ السَّرَوِيُّ، أنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي حَاتِمٍ، ثنا أَبِي وَعَلِيُّ بْنُ الْحَسَنِ الْهِسِنْجَانِيُّ ، قَالَا سَمِعْنَا يَحْيَى بْنَ الْمُغِيرَةِ ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُيَيْنَةَ ، يَقُولُ: «لَا تَسْمَعُوا مِنْ بَقِيَّةَ مَا كَانَ فِي سُنَّةٍ ، وَاسْمَعُوا مِنْهُ مَا كَانَ فِي ثَوَابٍ وَغَيْرِهِ»

الكفاية في علم الرواية للخطيب البغدادي (ص134):
ثنا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الْقَطَّانُ النَّيْسَابُورِيُّ ، لَفْظًا، أنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ الْحَافِظُ ، قَالَ: سَمِعْتُ أَبَا زَكَرِيَّا يَحْيَى بْنَ مُحَمَّدٍ الْعَنْبَرِيَّ يَقُولُ: سَمِعْتُ أَبَا الْعَبَّاسِ أَحْمَدَ بْنَ مُحَمَّدٍ السِّجْزِيَّ يَقُولُ: سَمِعْتُ النَّوْفَلِيَّ يَعْنِي أَبَا عَبْدِ اللَّهِ ، يَقُولُ: سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ ، يَقُولُ: «إِذَا رَوَيْنَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْحَلَالِ وَالْحَرَامِ وَالسُّنَنِ وَالْأَحْكَامِ تَشَدَّدْنَا فِي الْأَسَانِيدِ ، وَإِذَا رَوَيْنَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي فَضَائِلِ الْأَعْمَالِ وَمَا لَا يَضَعُ حُكْمًا وَلَا يَرْفَعُهُ تَسَاهَلْنَا فِي الْأَسَانِيدِ»

  • ஹஸன் லிஃகைரிஹீ தரத்தில் அமைந்த செய்திகள் குறைந்த வகை பலவீனமானவை என்பதால் இவை பல அறிவிப்பாளர்தொடர்களில் வரும்போது இவைகள்,

1. அமல்களின் சிறப்பு பற்றிய செய்திகளாகவோ அல்லது
2. வரலாறு பற்றிய செய்திகளாகவோ அல்லது
3. நல்ல செயல்களைப் பற்றி ஆர்வமூட்டும் செய்திகளாவோ அல்லது
4. தீயவற்றை எச்சரிக்கை செய்யும் செய்திகளாகவோ இருந்தால்

இவைகளை ஏற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தில் ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
இப்னு உயைனா, அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் ஏற்கனவே வேறு பலமான செய்திகளில் கூறப்படாத ஹலால்; ஹராம் பற்றிய செய்திகளாகவோ அல்லது புதிய மார்க்க சட்டங்கள், கொள்கை பற்றிய செய்திகளாகவோ இருந்தால் அவைகளை ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.

(நூல்: அல்கிஃபாயது ஃபீ இல்மிர் ரிவாயா-கதீப் பஃக்தாதீ-1/133, 134)


(ஆரம்பக்கால ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் ஹஸனான ஹதீஸ் என்ற வார்த்தைப் பிரயோகத்தை பலவகையில் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் விவரம்:

1 . ஷாஃபிஈ இமாம்

2 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

3 . யஹ்யா பின் ஸயீத்

4 . இப்னுல் மதீனீ

5 . அஹ்மத்

6 . புகாரீ

7 . யஃகூப் பின் ஷைபா

8 . அபூஸுர்ஆ

9 . அபூஹாதீம் அர்ராஸீ

இவர்களில் சிலர் சரியான ஹதீஸுக்கும் ஹஸன் என்று கூறியுள்ளனர். சிலர், இப்னுஹஜர் அவர்கள் கூறியிருப்பது போன்ற செய்திகளுக்கும் ஹஸன் என்று கூறியுள்ளனர். சிலர் திர்மிதீ இமாம் கூறியிருப்பது போன்ற செய்திகளுக்கும் ஹஸன் என்று கூறியுள்ளனர். சிலர், சிலவகை பலவீனமான செய்திகளுக்கும் ஹஸன் என்று கூறியுள்ளனர்.


திர்மிதீ இமாமுக்கு பிறகு வந்த (பலதரப்பட்ட காலங்களைச் சேர்ந்த அறிஞர்களில்) சிலர் ஹஸன் என்பதற்கு பலவகை வரைவிலக்கணத்தைக் கூறியுள்ளனர்.

அவர்களின் விவரம்:

1 . கத்தாபீ,பிறப்பு ஹிஜ்ரி 319
இறப்பு ஹிஜ்ரி 388
வயது: 69
2 . மய்யானிஷ்,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 581
3 . இப்னுல் ஜவ்ஸீ,பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
4 . இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ,பிறப்பு ஹிஜ்ரி 562
இறப்பு ஹிஜ்ரி 628
வயது: 66
5 . இப்னு திஹ்யதுல் கல்பீ,பிறப்பு ஹிஜ்ரி 544
இறப்பு ஹிஜ்ரி 633
வயது: 89
6 . இப்னுஸ் ஸலாஹ்…

(இவர்களின் வரைவிலக்கணத்தை கூறினால் இந்தக் கட்டுரை நீண்டுவிடும்)

இவர்களுக்கு பின்னால் வந்த இப்னுல் முலக்கின்,பிறப்பு ஹிஜ்ரி 723
இறப்பு ஹிஜ்ரி 804
வயது: 81
இப்னு ஜமாஆ,பிறப்பு ஹிஜ்ரி 639
இறப்பு ஹிஜ்ரி 733
வயது: 94
அல்ஹுஸைன் தீபீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 743
ஆகியோரும் ஹஸன் என்பதற்கு விரிவான வரைவிலக்கணத்தைக் கூறியுள்ளனர்.

சிலர் மேற்கூறப்பட்டவர்களின் வரைவிலக்கணத்தையும் ஹதீஸ்களையும் ஆய்வு செய்து அந்த வரைவிலக்கணத்தை விரிவாக கூறினர். சிலர் சுருக்கமாக கூறினர். சிலர் மேற்கூறப்பட்டவர்களின் வரைவிலக்கணத்தை இப்படி கூறியிருந்தால் சரியாக இருக்கும்; அப்படி கூறியிருந்தால் சரியாக இருக்கும் என்று விமர்சனமும் செய்தனர். இதற்கு உதாரணமாக இப்னு தகீகுல் ஈத்,பிறப்பு ஹிஜ்ரி 625
இறப்பு ஹிஜ்ரி 702
வயது: 77
இப்னு கஸீர்,பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோரைக் கூறலாம்.

எனவே தான் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களின் ஆசிரியரான இப்னு தகீகுல் ஈத் பிறப்பு ஹிஜ்ரி 625
இறப்பு ஹிஜ்ரி 702
வயது: 77
அவர்கள் அனைத்து வகை ஹஸன் தர செய்திகளையும் உள்ளடக்கும் வரைவிலக்கணத்தைக் கூறுவது கடினம் என்று கூறியுள்ளார். இவரின் கருத்தையே தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் குறிப்பிட்டுவிட்டு ஹஸன் என்பதற்கு 3 வரைவிலக்கணத்தைக் கூறியுள்ளார்:

الحسن ما ارتقى عن درجة الضعيف، ولم يبلغ درجة الصحة

الحسن ما سلم من ضعف الرواة

إن الحسن ما قصر سنده قليلا عن رتبة الصحيح

1 . ஹஸன் தர ஹதீஸ் என்றால், சரியான ஹதீஸின் தரத்தை அடையாத; பலவீனமான ஹதீஸ் என்ற நிலையை அடையாத செய்தி.

2 . ஹஸன் தர ஹதீஸ் என்றால், அறிவிப்பாளர்களின் பலவீனத்தை விட்டு நீங்கிய செய்தி.

3 . ஹஸன் தர ஹதீஸ் என்றால், சரியான ஹதீஸின் தரத்தை அடைய முடியாத அளவிற்கு சிறிது தரம் குறைந்த அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ள செய்தி.

ثم لا تَطمَعْ بأنَّ للحسَنِ قاعدةً تندرجُ كلُّ الأحاديثِ الحِسانِ فيها، فأَنَا على إِياسٍ من ذلك! فَكَمْ مِن حديثٍ تردَّدَ فيه الحُفَّاظُ: هل هو حسَن؟ أو ضعيف؟ أو صحيحٌ؟ بل الحافظُ الواحدُ يتغيَّرُ اجتهادُه في الحديث الواحد: فيوماً يَصِفُه بالصحة، ويوماً يَصِفُه بالحُسْن، وَلَرُبَّما استَضْعَفَه! وهذا حقٌّ، فإنَّ الحديثَ الحَسَنَ يَستضعفه الحافظُ عن أن يُرَقِّيَه إلى رُتبةِ الصحيح. فبهذا الاعتبارِ فيه ضَعْفٌ مَّا، إذْ الحَسَنُ لا ينفكُّ عن ضَعْفٍ مَّا. ولو انفَكَّ عن ذلك، لصَحَّ باتفاق.

(தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இந்த வரைவிலக்கணத்தைக் கூறிய பின்பும் இதில் அனைத்து வகையான ஹஸன் தர செய்திகளும் உள்ளடங்கும் என்று நீ கருதிவிடாதே!. இதைக் கூறியபின்பும் எனக்கு மனதிருப்தி இல்லை. அனைத்து ஹஸன் தர செய்திகளையும் உள்ளடக்கும் வரைவிலக்கணத்தை கூறுவதை விட்டு நான் நிராசையடைந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.)

காரணம் ஹதீஸ்கலை அறிஞர்கள் எத்தனையோ செய்திகள் விசயத்தில் இது ஹஸன் தர ஹதீஸா? அல்லது பலவீனமான ஹதீஸா? அல்லது சரியான ஹதீஸா? என்று முடிவு செய்யமுடியாமல் இருப்பார்கள். (முடிவு செய்வதற்கு காலதாமதம் ஆகும்). ஒரு அறிஞரே ஒரு செய்தியை ஒரு நாள் சரியானது என்று கூறிவிட்டு மற்றொரு நாள் ஹஸன் தரம் என்று கூறிவிட்டு மற்றொரு நாள் பலவீனமானது என்று கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு அறிஞர் ஹஸன் தர செய்தியை சரியான ஹதீஸின் தரத்திற்கு கொண்டு செல்லமாட்டார். இதனடிப்படையில் ஹஸன் தர செய்தி என்றால் அதில் ஏதோ ஒரு சிறு பலவீனம் உள்ளது என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இமாம் கூறியுள்ளார்)

(நூல்: அல்மூகிளது ஃபீ இல்மி முஸ்தலஹில் ஹதீஸ்-1/26-33)

முற்கால அறிஞர்களின் வழக்கிலிருந்தும், அறிவிப்பாளர்களின் தர அடிப்படையிலும் அனைத்து வகை ஹஸன் தர செய்திகளையும் உள்ளடக்கும் வகையில் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் வரைவிலக்கணத்தைக் கூறினார். (இவரின் கருத்தின்படியே பிற்கால அறிஞர்களில் அதிகமானோர் ஹதீஸின் தரத்தைக் குறிப்பிடுகின்றனர்)


திர்மிதீ இமாம், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்றோர் இவ்வாறு ஹஸன் தர செய்திகளை வகைப்படுத்தியதில் சில பயன்கள் உள்ளன. சில ஹதீஸ்களின் கருத்துக்களோ அல்லது அறிவிப்பாளர்தொடர்களோ அல்லது வார்த்தைகளோ மாறுபட்டு வரும் போது யாரின் அறிவிப்பு சரியானது என்று அடையாளம் காண்பது எளிதாகும். காரணம் சரியான தரத்தில் இருக்கும் அறிவிப்பாளர்களை விட ஹஸன் தரத்தில் இருக்கும் அறிவிப்பாளர்களிடம் தவறு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் எது மஹ்ஃபூல்? எது ஷாத்? எது மஃரூஃப்? எது முன்கர்? என்று அடையாளம் கண்டுவிடலாம். இவ்வாறு பிரிக்காமல் இருந்தால் அறிவிப்பாளர்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்களால் மட்டுமே குறையை கண்டுபிடிக்க முடியும். மற்றவர்களால் குறையை கண்டுபிடிக்க முடியாது.

(இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களுக்கு பின் வந்த) அஷ்ஷுமுன்னீ பிறப்பு ஹிஜ்ரி 810
இறப்பு ஹிஜ்ரி 872
வயது: 62
அவர்கள், ஹஸன் லிதாதிஹீ என்பதற்கு இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறிய வரைவிலக்கணத்துடன் அறிவிப்பாளர் நினைவாற்றல் சுமாரானவராக இருப்பது மட்டும் போதாது; அவர் முன்கரான அறிவிப்பாளராக அதாவது அவர் தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது என்று விமர்சிக்கப்படாதவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை சேர்த்துள்ளார். இந்தத் தகவலை அஷ்ஷுமுன்னீ பிறப்பு ஹிஜ்ரி 810
இறப்பு ஹிஜ்ரி 872
வயது: 62
அவர்களின் மாணவரான ஸுயூத்தி பிறப்பு ஹிஜ்ரி 849
இறப்பு ஹிஜ்ரி 911
வயது: 62
இமாம் கூறியுள்ளார்.

تدريب الراوي في شرح تقريب النواوي (1/ 173)

وَقَالَ شَيْخُنَا الْإِمَامُ تَقِيُّ الدِّينِ الشُّمُنِّيُّ: الْحَسَنُ خَبَرٌ مُتَّصِلٌ قَلَّ ضَبْطُ رَاوِيهِ الْعَدْلِ، وَارْتَفَعَ عَنْ حَالِ مَنْ يُعَدُّ تَفَرُّدُهُ مُنْكَرًا، وَلَيْسَ بِشَاذٍّ وَلَا مُعَلَّلٍ.

(நூல்: தத்ரீபுர் ராவீ-1/173)


ஒரு செய்தியை பிற்கால அறிஞர்களில் சிலர் ஹஸன் என்று பொதுவாகக் கூறினால் அதன் கருத்து ஹஸன் லிதாதிஹீ என்று புரிந்துக் கொள்ளவேண்டும். சிலர் ஹஸன் லிஃகைரிஹீ என்பதற்கும் ஹஸன் என்று கூறியிருப்பார்கள். அந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்வதின் மூலம் அந்தச் செய்தி ஹஸன் லிதாதிஹீ வகையா? அல்லது ஹஸன் லிஃகைரிஹீ என்ற வகையா? என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.


(இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
போன்ற சில அறிஞர்கள் (ஆரம்பக்கால அறிஞர்களைப் போன்றே) நினைவாற்றல் சுமாரானவர்கள் அறிவிக்கும் செய்திகளையும் ஸஹீஹ் வகையில் சேர்க்கின்றனர். இவ்வாறே வேறு சில ஹஸன் தர செய்திகளையும் ஸஹீஹ் வகையில் சேர்க்கின்றனர்.

இவர்கள் ஹதீஸ்களை 1 . ஆதாரத்திற்கேற்ற ஹதீஸ், 2 . ஆதாரமாக ஏற்கமுடியாத ஹதீஸ் என்று இருவகைகளாக மட்டுமே பிரிக்கின்றனர்)


ஜய்யித், முஜவ்வத், தஜ்வீத் என்பதின் பொருள்:

சில அறிஞர்கள் ஒரு அறிவிப்பாளர்தொடரை பற்றி கூறும்போது اسناده جيد – இந்த அறிவிப்பாளர்தொடர் ஜய்யித் என்றும் கூறுவர்.

  • இந்த வார்த்தை சரியான ஹதீஸுக்கும் கூறப்படும். சரியான ஹதீஸா அல்லது ஹஸன் தர ஹதீஸா என்று முடிவுசெய்யமுடியாத ஹதீஸுக்கும் கூறப்படும். இவ்வாறு கூறுவோரின் நோக்கம் இந்த செய்தி மக்பூல் எனும் ஏற்கத்தக்க செய்தியாகும் என்பதாகும்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் அவர்கள் மிகவும் சரியான அறிவிப்பாளர்தொடர் என்று கூறும்போது அஜ்வதுல் அஸானீத் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.
  • திர்மிதீ இமாம் அவர்கள் ஹஸன் தர செய்தியை பற்றி கூறும் போது ஜய்யித் ஹஸன் என்று கூறியுள்ளார்.

(அல்ஃபிய்யா-ஸுயூதீ-109, 110)

ஜவ்வத ஃபுலான்- جود فلان என்ற வார்த்தையை ஆரம்பக்கால அறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதன் நேரடிபொருள் இவர் இந்த அறிவிப்பாளர்தொடரை அழகாக்கியுள்ளார் என்பதாகும். இதன் கருத்து தத்லீஸ் தஸ்வியத் என்பதாகும். எனவே இதை ஹஸன்தரம் என்று முடிவு செய்யக்கூடாது. தத்ஸீஸ் செய்யப்பட்ட செய்தியில் ஏற்கும் நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே ஏற்கப்படும். இல்லையென்றால் மறுக்கப்படும்.

(அல்ஃபிய்யா-ஸுயூதீ-172, 173)

எனவே இந்த வார்த்தைகளைக் கூறும் அறிஞரின் வழக்கு என்ன என்பதை தெரிந்துதான் முடிவு செய்யவேண்டும்.




الرسالة للشافعي (1/ 462)

فمن شاهدَ أصحاب رسول الله من التابعين، فحدَّث حديثاً منقطعاً عن النبي: اعتُبر عليه بأمور:
1 – منها: أن ينظر إلى ما أَرسل من الحديث، فإن شَرِكَه فيه الحفاظ المأمونون، فأسندوه الى رسول الله بمثل معنى ما روى: كانت هذه دلالةً على صحة مَن قبل عنه وحفظه.

2 – وإن انفرد بإرسال حديث لم يَشركه فيه من يُسنده قُبِل ما ينفرد به من ذلك.
ويعتبر عليه بأن ينظر: هل يوافقه مرسِل غيره ممن قُبل العلم عنه من غير رجاله الذين قُبل عنهم؟
فإن وُجد ذلك كانت دلالةً يَقوى له مرسلُه، وهي أضعف من الأولى.

3 – وإن لم يُوجَد ذلك نُظر إلى بعض ما يُروى عن بعض أصحاب رسول الله قولاً له، فإن وُجد يُوافق ما روى عن رسول الله كانت في هذه دلالةٌ على أنه لم يأخذ مرسَلَه إلا عن أصل يصح إن شاء الله.

4 – وكذلك إن وُجد عوامُّ من أهل العلم يُفتون بمثل معنى ما روى عن النبي.

முன்கதிஃயான அல்லது முர்ஸலான செய்தியை எப்போது ஆதாரமாக ஏற்கலாம் என்பது பற்றி ஷாஃபிஈ இமாம் அவர்களின் கருத்து:

ஷாஃபிஈ இமாம் அவர்கள், ஒரு முர்ஸலான செய்தியை நான்கு காரணங்களில் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்போது ஆதாரமாக ஏற்கலாம் என்று கூறியுள்ளார்.

1 . அந்த செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில் முஸ்னதாக-மவ்ஸூலாக வந்திருப்பது.
2 . அந்த செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்திருப்பது.
3 . அந்த செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக வந்திருப்பது.
4 . அதிகமான அறிஞர்கள் அந்தச் செய்தியின் அடிப்படையில் சட்டம் கூறியிருப்பது.

(நூல்: அர்ரிஸாலா-ஷாஃபிஈ-1/461)


இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:

1 . பார்க்க: அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள் .

2 . பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .


ஆரம்பக் கால அறிஞர்கள் ஹஸன் லிஃகைரிஹீ என்ற தரத்தில் உள்ள செய்திகளை ஆதாரமாக ஏற்றுள்ளனரா?

ஆய்வுக்காக: هل الحديث الحسن حجة عند المتقدمين؟ .



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.