தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-3703

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

அல்லாஹ் ஒருவருக்கு வசதி வாய்ப்புகளை வழங்கியிருந்தும் அவர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்குள் ஒரு தடவை பழமையான ஆலயத்துக்கு (ஹஜ் செய்ய) வராவிட்டால் அவர் … இழந்தவராவார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறுகிறான்: நான், ஒரு அடியாருக்கு உடல் ஆரோக்கியத்தையும், விசாலமான பொருளாதாரத்தையும் வழங்கியிருந்து அவர் எனது கஅபா எனும் ஆலயத்துக்கு வராமல் 5 ஆண்டுகள் கடந்துவிட்டால் பிறகு அவருக்கு அந்த நற்பேறு கிடைக்காமல் போய்விடும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

(இப்னு ஹிப்பான்: 3703)

ذِكْرُ الْإِخْبَارِ عَنْ إِثْبَاتِ الْحِرْمَانِ لِمَنْ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ، ثُمَّ لَمْ يَزُرِ الْبَيْتَ الْعَتِيقَ فِي كُلِّ خَمْسَةِ أَعْوَامٍ مَرَّةً

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيُّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«قَالَ اللَّهُ: إِنَّ عَبْدًا صَحَّحْتُ لَهُ جِسْمَهُ، وَوَسَّعْتُ عَلَيْهِ فِي الْمَعِيشَةِ يَمْضِي عَلَيْهِ خَمْسَةُ أَعْوَامٍ لَا يَفِدُ إِلَيَّ لَمَحْرُومٌ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-3703.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


இந்தச் செய்தியை சிலர் சரியானது என்றும் சிலர் பலவீனமானது என்றும் சிலர் (கருத்து சரியில்லை என்பதால்) இட்டுக்கட்டப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

இந்தச் செய்தியை பற்றிய விரிவான ஆய்வில் இது நபித்தோழரின் கூற்று என்றே தெரியவருகிறது…

இதைப் பற்றிய தகவல்:


1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:



 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.