தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-812

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஹஜ் கடமையானப் பின்பும் அதை விடுவது குறித்து வந்துள்ள கண்டனம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்வின் (கஅபா) ஆலயத்திற்கு கொண்டு சேர்க்கும் (பொருளாதார) வசதி, (பயணம் செய்வதற்கான) வாகன வசதி ஆகியவற்றை பெற்றிருந்தும் அவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் யூதராகவோ அல்லது கிருத்துவராகவோ மரணித்துவிடுவது பரவாயில்லை.

ஏனெனில் அல்லாஹ் தனது வேதத்தில் கூறுகிறான்:

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன்: 3:97)

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இந்த செய்தியை இந்த வகை அறிவிப்பாளர் தொடரிலேயே நாம் அறிகின்றோம்.

இதன் அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் உள்ளது. (காரணம்) இதில் இடம்பெறும் ஹிலால் பின் அப்துல்லாஹ் என்பவர் அறியப்படாதவர் ஆவார். ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் அல்அஃவர் என்பவர் (ஹதீஸ்கலை அறிஞர்களால்) பலவீனமானவர் என்று கூறப்பட்டுள்ளார்.

(திர்மிதி: 812)

بَابُ مَا جَاءَ فِي التَّغْلِيظِ فِي تَرْكِ الحَجِّ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى القُطَعِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا هِلَالُ بْنُ عَبْدِ اللَّهِ، مَوْلَى رَبِيعَةَ بْنِ عَمْرِو بْنِ مُسْلِمٍ البَاهِلِيِّ قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الهَمْدَانِيُّ، عَنْ الحَارِثِ، عَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا، أَوْ نَصْرَانِيًّا، وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ: {وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ البَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا} [آل عمران: 97]

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ، وَفِي إِسْنَادِهِ مَقَالٌ، وَهِلَالُ بْنُ عَبْدِ اللَّهِ مَجْهُولٌ، وَالحَارِثُ يُضَعَّفُ فِي الحَدِيثِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-812.
Tirmidhi-Alamiah-740.
Tirmidhi-JawamiulKalim-739.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் யஹ்யா

3 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம்

4 . ஹிலால் பின் அப்துல்லாஹ் (ரபீஆ பின் அம்ரின் அடிமை) 

5 . அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ

6 . ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் அல்அஃவர்

7 . அலீ பின் அபூதாலிப் (ரலி)


ஆய்வின் சுருக்கம்:

இந்தக் கருத்தில் வரும் செய்திகளில், இது உமர் (ரலி) அவர்களின் சொல்லாக வந்துள்ள செய்தியே சரியான அறிவிப்பாளர்தொடராகும். எனவே இது நபித்தோழரின் சொல்லாகும்.

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-14455.


விரிவான தகவல்:

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47361-ஹிலால் பின் அப்துல்லாஹ்,

 

மேலும் ராவீ-10937-ஹாரிஸ் பின் அப்துல்லாஹ்

பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள் அனைத்திலும்; அனைத்து நூல்களிலும் ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் இடம்பெறுவதால் இது மிக பலவீனமான செய்தியாகும்.


1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-812, முஸ்னத் பஸ்ஸார்-861 , ஷுஅபுல் ஈமான்-3692, …


2 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரிமீ-1826.


3 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-14455.


4 . அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-14450.


5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அத்தஹ்கீகு ஃபீ மஸாஇலில் கிலாஃப்-1211,

التحقيق في مسائل الخلاف (2/ 118)
1211 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ خيرون أنبأ إِسْمَاعِيل بن مسْعدَة أنبأ حَمْزَة بن يُوسُف قَالَ أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ قَالَ أنبأ أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ قَالَ ثَنَا عبد الرَّحْمَن بن سعيد ثَنَا عبد الرَّحْمَن الْقطَامِي ثَنَا أَبُو الْمُهْزِمِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَاتَ وَلم يحجّ حجَّة الْإِسْلَام فِي غَيْرِ وَجَعٍ حَابِسٍ أَوْ حُجَّةٍ ظَاهِرَةٍ أَوْ سُلْطَانٍ جَائِرٍ فَلْيَمُتْ أَيُّ الْمَيْتَتَيْنِ إِمَّا يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا
أَبُو الْمُهْزِمِ اسْمُهُ يَزِيدُ بْنُ سُفْيَانَ قَالَ يَحْيَى بْنُ مَعِينٍ لَيْسَ حَدِيثُهُ بِشَيْءٍ وَقَالَ النَّسَائِيُّ مَتْرُوكُ الْحَدِيثِ وَأَمَّا عَبْدُ الرَّحْمَنِ الْقَطَّامِيُّ فَقَالَ عَمْرُو بْنُ عَلِيٍّ الْفَلَاس كَانَ كَذَّابًا وَقَالَ ابْن حبَان يجب تَكْذِيب رِوَايَاتِهِ


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-3703,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.