கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (இருந்தது)’ என்றார்கள்.
மேலும் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்.
ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) உள்ளவராக இருந்தார்.
(இப்னு ஹிப்பான்: 492)
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ:
قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَكَانَتِ الْمُصَافَحَةُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قَالَ: «نَعَمْ».
قَالَ قَتَادَةُ: وَكَانَ الْحَسَنُ يُصَافِحُ
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-492.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-497.
- இந்த செய்தி நபித்தோழரின் கூற்றாக இருந்தாலும், கேள்வி கேட்டவர் “முஸாஃபஹா செய்வது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததா?” என்று கேட்டுள்ளார். அதற்கு நபித்தோழர் ஆம் என்று பதிலளித்துள்ளார். இந்த வகை செய்திகள் நபி (ஸல்) அவர்களுடன் சம்பந்தப்படுவதால் இதுவும் மர்ஃபூஃ என்றே கூறப்படும்.
1 . இந்த செய்தியை ஹம்மாம் பின் யஹ்யா அவர்களிடமிருந்து ஐந்து பேர் அறிவித்துள்ளனர்.
1 . அம்ர் பின் ஆஸிம்.
பார்க்க: புகாரி-6263 .
2 . அப்துல்லாஹ் பின் முபாரக்.
பார்க்க: திர்மிதீ-2729 .
3 . அப்துல் மலிக் பின் இப்ராஹீம்
பார்க்க: குப்ரா பைஹகீ-13568 , அல்ஆதாப் லில்பைஹகீ-225 ,
4 . யஸீத் பின் ஹாரூன்.
பார்க்க: மஷ்யகது இப்னு ஜமாஆ-6/2
5 . ஹுத்பா பின் காலித்.
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-2871 , இப்னு ஹிப்பான்-492 ,
இவர்களில் அப்துல்லாஹ் பின் முபாரக், அம்ர் பின் ஆஸிம், அப்துல் மலிக் பின் இப்ராஹீம் ஆகியோர் முஸாஃபஹா செய்வது நபித்தோழர்களிடையே இருந்ததா?’ என்ற கருத்தை அறிவித்துள்ளனர். “நபித்தோழர்களிடையே” என்று கூறும் போது அவர்கள் நபி (ஸல்) இருக்கும் போது செய்த செயலையும் குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு செய்த செயலையும் குறிக்கும்.
மற்ற இருவர், முஸாஃபஹா செய்வது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததா?” என்ற கருத்தை அறிவித்துள்ளனர்.
அம்ர் பின் ஆஸிம் சுமாரானவர், நினைவாற்றலில் சிறிது குறையுள்ளவர்; அப்துல் மலிக் பின் இப்ராஹீம் அறிவிக்கும் செய்தியில் அவரின் மாணவரான யஹ்யா பின் அபூதாலிப் பற்றி விமர்சனம் உள்ளது என்பதால் யஸீத் பின் ஹாரூனும், ஹுத்பா பின் காலிதும் அறிவிக்கும் கருத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
2 . என்றாலும் கதாதா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுஃபா அவர்கள், இந்த செய்தியை நபித்தோழர்களின் செயலாகவே அறிவித்துள்ளார்.
ஷுஃபாவும், ஹம்மாம் பின் யஹ்யாவும் பஸராவாசிகள்; இருவருமே கதாதாவிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். கதாதாவிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹம்மாமுக்கு முன்னுரிமை உண்டு என்று இப்னு முபாரக் அவர்கள் கூறியுள்ளார். கதாதாவிடமிருந்து அறிவிப்பவர்களில் இப்னு அபூஅரூபா, ஹிஷாம், ஷுஃபா, ஹம்மாம் ஆகியோரின் கருத்துக்கு முன்னுரிமை உண்டு என்று அம்ர் பின் அலீ அவர்கள் கூறியுள்ளார்…
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/284, இக்மாலு தஹ்தீபுல் கமால்-12/165)
எனவே இதிலிருந்து கதாதா அவர்கள் இருவகையான வார்த்தைகளை அறிவித்திருக்கலாம். அல்லது ஹம்மாமின் அறிவிப்பு தவறாக இருக்கலாம் என்றும் கருத வாய்ப்பு உள்ளது…
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹம்மாம் —> கதாதா —> அனஸ் (ரலி)
பார்க்க: புகாரி-6263 , திர்மிதீ-2729 , முஸ்னத் அபீ யஃலா-2871 , இப்னு ஹிப்பான்-492 , குப்ரா பைஹகீ-13568 , ஷுஅபுல் ஈமான்-8540 , அல்ஆதாப் லில்பைஹகீ-225 ,
- ஷுஃபா —> கதாதா —> அனஸ் (ரலி) —> நபித்தோழர்கள்
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25719 , அல்முஃஜமுல் அவ்ஸத்-97 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2727 , திர்மிதீ-2728 ,
சமீப விமர்சனங்கள்