தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-6190

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஆதம் (அலை) அவர்களுக்கும், நூஹ் (அலை) அவர்களுக்கும் இடையில் உள்ள தலைமுறையினர் பற்றி வந்துள்ள செய்திகள்.

ஒரு மனிதர் (நபி-ஸல் அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! ஆதம் (அலை) அவர்கள் நபியா? என்று கேட்டார். அதற்கவர்கள், “ஆம், அவர் அல்லாஹ்விடம் பேசிய நபி” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “ஆதம் நபிக்கும், நூஹ் நபிக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 10 தலைமுறை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(இப்னு ஹிப்பான்: 6190)

ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا كَانَ بَيْنَ آدَمَ وَنُوحٍ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمَا مِنَ الْقُرُونِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ زَنْجُوَيْهِ، حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، عَنْ أَخِيهِ زَيْدِ بْنِ سَلَّامٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَّامٍ، قَالَ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ،

أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَنَبِيٌّ كَانَ آدَمُ؟ قَالَ: «نَعَمْ، مُكَلَّمٌ»، قَالَ: فَكَمْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ نُوحٍ؟ قَالَ: «عَشَرَةُ قُرُونٍ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-6190.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-6324.




  • இந்த செய்தியுடன் ரஸூல்மார்களின் எண்ணிக்கை பற்றியும் கூடுதலாக கூறப்பட்டுள்ளது. (பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7545). மேலும் இந்த செய்தி சரியான அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. பலவீனமான அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. சரியான அறிவிப்பாளர்தொடர்களை கவனிக்காமல் சிலர் இந்த செய்தியை பலவீனமானது என்று முடிவு செய்துள்ளனர்.
  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இதை சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-2668)

4 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூதவ்பா (ரபீஉ பின் நாஃபிஃ) —> முஆவியா பின் ஸல்லாம் —> ஸைத் பின் ஸல்லாம் —> மம்தூர் (அபூஸல்லாம்) —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: ஜுஸ்உ ஃபீ மஜ்லிஸானி-768 , இப்னு ஹிப்பான்-6190 , அல்முஃஜமுல் கபீர்-7545 , அல்முஃஜமுல் அவ்ஸத்-403 , ஹாகிம்-3039 ,

  • அலீ பின் ஸைத் —> காஸிம் பின் .. —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: அஹ்மத்-22288 , அல்முஃஜமுல் கபீர்-7871 , 7891 ,

மேலும் பார்க்க: அஹ்மத்-21546 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.