தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Khuzaymah-2119

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பது நல்லது. ஏனெனில் அந்த நாட்களில் (அடியார்களின்) செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைப்பார்கள். மேலும் அவர்கள், “இந்த இரண்டு நாட்களில் (அடியார்களின்) செயல்கள் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன என்றும் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

 

(ibn-khuzaymah-2119: 2119)

بَابٌ فِي اسْتِحْبَابِ صَوْمِ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ أَيْضًا؛ لِأَنَّ الْأَعْمَالَ فِيهِمَا تُعْرَضُ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي يَزِيدَ وَرَّاقٌ الْفِرْيَابِيِّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ، حَدَّثَنِي شُرَحْبِيلُ بْنُ سَعْدٍ، عَنْ أُسَامَةَ قَالَ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، وَيَقُولُ: «إِنَّ هَذَيْنِ الْيَوْمَيْنِ تُعْرَضُ فِيهِمَا الْأَعْمَالُ»


Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-2119.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-1986.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19116-ஷுரஹ்பீல் பின் ஸஃத் பற்றி சில அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் கடைசிக் காலத்தில் மூளைக் குழம்பியவர் என்று கூறியுள்ளார்…

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/157, தக்ரீபுத் தஹ்தீப்-1/433)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-2436 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.