பாடம்:
தொழுகையில் மலஜலத்தை அடக்கிக் கொண்டு தொழுவது பற்றி வந்துள்ள கண்டனம்.
நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது (அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் பேரன்) காஸிம் அவர்கள் தொழ எழுந்தார். அப்போது (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், “உணவு தயாராக இருக்கும் போதும், மலஜல உபாதைகளை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)
(ibn-khuzaymah-933: 933)بَابُ الزَّجْرِ عَنْ مُدَافَعَةِ الْغَائِطِ وَالْبَوْلِ فِي الصَّلَاةِ
نا بُنْدَارٌ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، وَيَحْيَى بْنُ حَكِيمٍ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ قَالُوا ثنا يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ، نا أَبُو حَزْرَةَ وَهُوَ يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ وَهُوَ ابْنُ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ قَالَ:
كُنَّا عِنْدَ عَائِشَةَ فَجِيءَ بِطَعَامٍ فَقَامَ الْقَاسِمُ يُصَلِّي، فَقَالَتْ عَائِشَةُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلَّى صَلَاةً بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»
Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-933.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-892.
- இந்த அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்பவர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபூபக்ர் அஸ்ஸித்தீக் ஆவார் என்று கூறுவது இந்த நூலின் ஆசிரியரான இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
அவர்களாகும். இந்தக் கருத்தில் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்களில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்று வந்திருப்பதே சரியானதாகும்.
மேலும் பார்க்க: முஸ்லிம்-969 .
சமீப விமர்சனங்கள்