அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாளர்களாக இருந்துகொண்டே இருப்பார்கள். (அவர்கள் அல்லாஹ்வினால்) உதவி செய்யப்படுவார்கள். அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருக்கும்போதே இறைக்கட்டளை (மறுமைக்கு நெருக்கமான நிலை) வந்துவிடும்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
(இப்னுமாஜா: 10)حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا يزالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ مَنْصُورِينَ، لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ عَزَّ وَجَلَّ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-10.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-10.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17234-ஸயீத் பின் பஷீர் பற்றி சிலர் பலமானவர் என்றும்; சிலர் சுமாரானவர் என்றும்; சிலர் பலவீனமானவர் என்றும்; சிலர் முன்கருல் ஹதீஸ் என்றும் கூறியுள்ளனர்.(சுருக்கம்)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/8, தக்ரீபுத் தஹ்தீப்-1/374)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்த செய்தி சரியான அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
மேலும் பார்க்க: முஸ்லிம்-5538 .
சமீப விமர்சனங்கள்