பாடம்:
ஜனாஸாத் தொழுகையில் (ஜனாஸாவுக்கு) துஆ செய்வது பற்றி வந்துள்ளவை.
“இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 1497)بَابُ مَا جَاءَ فِي الدُّعَاءِ فِي الصَّلَاةِ عَلَى الْجِنَازَةِ
حَدَّثَنَا أَبُو عُبَيْدٍ مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ الْمَدِينِيِّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْحَرَّانِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ، فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1497.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1486.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ–இப்னு இஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர் என்றாலும் இப்னு ஹிப்பான்- 3077 இல் ராவீ–முஹம்மது பின் இப்ராஹீமிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கும் வார்த்தையுடன் அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.
- இப்னு இஸ்ஹாக் அவர்கள் இதை தனித்து அறிவித்துள்ளார். இந்தக் கருத்து முன்கரானது அல்ல; அதாவது மற்றவர்கள் அறிவிக்காத புதிய சட்டம் உள்ள செய்தி அல்ல. எனவே இது ஹஸன் தரமாகும்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1497 , அபூதாவூத்-3199 , முஸ்னத் பஸ்ஸார்-7830 , 8560 , இப்னு ஹிப்பான்-3076 , 3077 , குப்ரா பைஹகீ-6964 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-3201 ,
சமீப விமர்சனங்கள்