பாடம்:
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
(ஒரு தடவை) கப்பாப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், நெருங்கி வாருங்கள்! அம்மார் அவர்களுக்கு பிறகு உங்களைத் தவிர வேறு யாரும் இந்த சபைக்கு ஏற்றமானவர்கள் அல்ல! என்று கூறினார். அப்போது கப்பாப் அவர்கள், (இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்) இணைவைப்போர் கொடுமைப் படுத்தியதால் ஏற்பட்டிருந்த முதுகிலிருந்த காயத் தழும்புகளை காட்டினார்.
அறிவிப்பவர்: அபூலைலா (ரஹ்)
(இப்னுமாஜா: 153)فَضَائِلُ خَبَّابٍ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي لَيْلَى الْكِنْدِيِّ، قَالَ:
جَاءَ خَبَّابٌ إِلَى عُمَرَ فَقَالَ: «ادْنُ، فَمَا أَحَدٌ أَحَقَّ بِهَذَا الْمَجْلِسِ مِنْكَ إِلَّا عَمَّارٌ، فَجَعَلَ خَبَّابٌ يُرِيهِ آثَارًا بِظَهْرِهِ مِمَّا عَذَّبَهُ الْمُشْرِكُونَ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-153.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-150.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32397-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்) புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோரின் அறிவிப்பாளர் ஆவார். - இவர் பலமானவர் என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அபூஹாதிம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் கூறியுள்ளனர். - இவர் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று சிலரும்; இவர் மூளைக் குழம்பவில்லை; வயதான காரணத்தால் அவருக்கு சிறிது மறதி ஏற்பட்டது. அப்போது அவரிடம் ஹதீஸைக் கேட்டவர்கள் அவரை விமர்சித்துள்ளனர் என்று சிலரும் கூறியுள்ளனர்.
- மஃன் பின் அப்துர்ரஹ்மான் மஸ்ஊதீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 121/130
அபூஜஃபர் தபரீ,பிறப்பு ஹிஜ்ரி 224
இறப்பு ஹிஜ்ரி 310
வயது: 86
அபூஜஃபர் நஹ்ஹாஸ்,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 338
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.ஆகியோர் இவர் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/284)
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
போன்ற இன்னும் சிலர் இவரிடம் ஆரம்ப காலத்தில் ஹதீஸைக் கேட்டவர்கள் என்பதால் இதில் முதல் விமர்சனம் இல்லை.
அபூலைலாவும் கூஃபாவாசி; அபூஇஸ்ஹாக் அவர்களும் கூஃபாவாசி என்பதால் இந்த செய்தியை அபூலைலாவிடம் நேரடியாக கேட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால் இதில் தத்லீஸ் என்ற குறையும் இல்லை. (மேற்கண்ட செய்தியில் இவர் தத்லீஸ் செய்திருப்பதால் சிலர் இந்த செய்தியை பலவீனமானது என்று கூறுகின்றனர்).
- மேலும் வேறொரு செய்தியின் விசயத்தில் ஷுஃபா அவர்கள், அபூஇஸ்ஹாகிடமிருந்து அறிவித்த (அபூஇஸ்ஹாக்—> அவ்ஸ் —> ஸல்மான் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடர் பற்றியும், ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள், அபூஇஸ்ஹாகிடமிருந்து அறிவித்த (அபூஇஸ்ஹாக்—> அபூலைலா என்ற அறிவிப்பாளர்தொடர் பற்றியும், இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள், தனது தந்தை அபூஹாதிமிடமும், அபூஸுர்ஆவிடமும் கேட்டபோது இருவருமே ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அறிவிக்கும் செய்தியே மிகச் சரியானது என்று கூறினர்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-299 (2/180)
இந்த செய்தியை அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் சரியானது என்றே கூறியுள்ளனர். (ஸஹீஹுஸ் ஸீரா-157, தஃலீக் இப்னு மாஜா-153)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-32245 , 36592 , இப்னு மாஜா-153 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-3612 ,
சமீப விமர்சனங்கள்