நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பார்கள். எனவே அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்புவைக்கிறீர்களே! (ஏன்) என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.
ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும், அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான். (தமக்கிடையே சண்டையிட்டு “பேசிக்கொள்ளாத இருவரைத் தவிர! “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள் என (வானவர்களுக்கு) அல்லாஹ் கூறிவிடுகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 1740)حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ رِفَاعَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” كَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ؟ فَقَالَ: ” إِنَّ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ يَغْفِرُ اللَّهُ فِيهِمَا لِكُلِّ مُسْلِمٍ، إِلَّا مُتَهَاجِرَيْنِ، يَقُولُ: دَعْهُمَا حَتَّى يَصْطَلِحَا
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1740.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1730.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி முஹம்மது பின் ரிஃபாஆ பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். மேலும் இவரிடமிருந்து அபூஆஸிம் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று கருதப்படுவார். - அபுல்ஃபத்ஹ் அல்அஸ்தீ அவர்கள், இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். (இவரே விமர்சிக்கப்பட்டவர் தான் என்றாலும் மற்றவர்களின் விமர்சனம் இல்லாத போது இவரின் கருத்தை ஏற்கலாம் என சிலர் கூறியுள்ளனர்). இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/562, தக்ரீபுத் தஹ்தீப்-1/844)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-747 .
சமீப விமர்சனங்கள்