1899. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் சில பகுதியைக் கடந்து சென்றபோது அங்கே பெண்களில் சிலர் (தஃப்) கஞ்சிரா எனும் இசைக் கருவியை அடித்தவர்களாக பாட்டுப்பாடிக் கொண்டிருந்தனர். (நபி ஸல் அவர்களைக் கண்ட அவர்கள் கீழ்கண்டவாறு) கவிதைகளைப் படித்தனர்:
“நாங்கள், பனூ நஜ்ஜாரைச் சேர்ந்த பெண்கள்; முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களின் அண்டை வீட்டாராக இருப்பது எவ்வளவு சிறப்புமிக்கது!.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “(எனது வருகையினால் சந்தோசமடையும்) உங்கள் மீது நான் நேசம் வைத்துள்ளேன் என்பதை அல்லாஹ் அறிவான்” என்று கூறினார்கள்.
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا عَوْفٌ، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِبَعْضِ الْمَدِينَةِ، فَإِذَا هُوَ بِجَوَارٍ يَضْرِبْنَ بِدُفِّهِنَّ، وَيَتَغَنَّيْنَ، وَيَقُلْنَ:
[البحر الرجز]
نَحْنُ جَوَارٍ مِنْ بَنِي النَّجَّارِ … يَا حَبَّذَا مُحَمَّدٌ مِنْ جَارِ
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ يَعْلَمُ إِنِّي لَأُحِبُّكُنَّ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1899.
Ibn-Majah-Alamiah-1889.
Ibn-Majah-JawamiulKalim-1889.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா
2 . ஹிஷாம் பின் அம்மார்
3 . ஈஸா பின் யூனுஸ்
4 . அவ்ஃப் பின் அபூஜமீலா
5 . ஸுமாமா பின் அப்துல்லாஹ்
6 . அனஸ் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47280-ஹிஷாம் பின் அம்மார் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும், ராவீ-32724-அவ்ஃப் பின் அபூஜமீலா அவர்களை சிலர் பலமானவர் என்றும் சிலர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும் கூறியுள்ளனர்…
எனவே இது ஹஸன் தர அறிவிப்பாளர்தொடராகும். வேறுசிலரும் இதை அறிவித்துள்ளனர் என்பதால் இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரம் ஆகும்.
மேலும் இந்த நிகழ்வு ஒரு திருமணத்தில் நடந்தது என்றும் சிலர் கூறியுள்ளனர்…
(அஸ்ஸஹீஹா-3154…)
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அவ்ஃப் பின் அபூஜமீலா —> ஸுமாமா பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-1899 , முஸ்னத் பஸ்ஸார்-7334 , அல்முஃஜமுஸ் ஸகீர்-78 ,
- ருஷைத் —> ஸாபித் பின் அஸ்லம் —> அனஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-,
- யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.—> இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)
பார்க்க: பைஹகீ-தலாஇலுன் நுபுவ்வஹ்-784 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-3925 ,
சமீப விமர்சனங்கள்