தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-23

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் குறித்து, ஹதீஸை அறிவிப்பதில் பேணுதலுடன் இருத்தல்.

அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

வியாழக்கிழமை மாலை வேளையில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் வீட்டுக்கு நான் தவறாமல் சென்றுவிடுவேன்; அவர்கள் எந்த விஷயத்தைப் பற்றியும் (உறுதியாகத் தெரியாமல்), “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று கூறியதாக நான் ஒருபோதும் கேட்டதில்லை.

ஒருநாள் மாலையில் அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் தலை குனிந்து நின்றார்கள். நான் அவர்களைப் பார்த்தேன். அவர்கள் தம் சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துவிட்டிருந்தார்கள். அவர்களின் கண்கள் கலங்கியிருந்தன; நரம்புகள் புடைத்திருந்தன.

(அறிவித்த பிறகு), “அது அதைவிடக் குறைவானதாகவோ, அதைவிட அதிகமானதாகவோ, அதற்கு நெருக்கமானதாகவோ, அல்லது அதை ஒத்ததாகவோ இருக்கலாம்” என்று (தம் அறிவிப்பில் பிழை வந்துவிடுமோ என்ற அச்சத்தால்) கூறினார்கள்.

(இப்னுமாஜா: 23)

بَابُ التَّوَقِّي فِي الْحَدِيثِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنِ ابْنِ عَوْنٍ قَالَ: حَدَّثَنَا مُسْلِمٌ الْبَطِينُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ:

مَا أَخْطَأَنِي ابْنُ مَسْعُودٍ عَشِيَّةَ خَمِيسٍ إِلَّا أَتَيْتُهُ فِيهِ، قَالَ: فَمَا سَمِعْتُهُ يَقُولُ لِشَيْءٍ قَطُّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا كَانَ ذَاتَ عَشِيَّةٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَنَكَسَ ” قَالَ: «فَنَظَرْتُ إِلَيْهِ، فَهُوَ قَائِمٌ مُحَلَّلَةً، أَزْرَارُ قَمِيصِهِ، قَدْ اغْرَوْرَقَتْ عَيْنَاهُ، وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ» قَالَ: أَوْ دُونَ ذَلِكَ، أَوْ فَوْقَ ذَلِكَ، أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ، أَوْ شَبِيهًا بِذَلِكَ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-23.
Ibn-Majah-Alamiah-23.
Ibn-Majah-JawamiulKalim-23.




குறிப்பு: இந்தச் செய்தியின் மூலம் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை அதே வார்த்தையின் மூலம் அறிவிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்களாக இருந்துள்ளார்கள் எனத் தெரிகிறது.

இதனால் தான் அதிகமாக இவரின் ஹதீஸ்கள் இவரின் சொல்லாக வந்துள்ளது என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். ஏதேனும் ஒரு சட்டம் பற்றி கேள்விக் கேட்கப்படும்போது அது குறித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஹதீஸின் வார்த்தை சரியாக தெரியாவிட்டால், “இது நபிவழி” என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்

2 . இப்னு அபூஷைபா

3 . முஆத் பின் முஆத்

4 . அப்துல்லாஹ் பின் அவ்ன்-இப்னு அவ்ன்

5 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இம்ரான்-அல்பத்தீன்

6 . இப்ராஹீம் பின் யஸீத்-அத்தைமீ

7 . அவரது தந்தை (யஸீத் பின் ஷரீக்)

8 . அம்ர் பின் மைமூன்-அல்அவ்தீ (ரஹ்)


 

வாரிதஹ்-3159.


1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்ராஹீம் பின் யஸீத் —> யஸீத் பின் ஷரீக் —> அம்ர் பின் மைமூன் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, இப்னு மாஜா-23, முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-,


அப்துல்லாஹ் பின் ஹபீப்

அஹ்மத்-, அல்முஃஜமுல் கபீர்-,


ஸஃத் பின் இயாஸ்

அல்முஃஜமுல் கபீர்-,


ஷஅபீ…

 


இப்ராஹீம் அன்னகஈ

அல்முஃஜமுல் கபீர்-,


இப்னு ஸீரீன்

தாரிமீ-,


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.