தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-254

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கற்றவர்களிடம் பெருமையடிப்பதற்காகவும், கல்லாதவர்களிடம் விவாதம் செய்வதற்காகவும் கல்வி கற்காதீர்கள். அதை வைத்துக் கொண்டு அவற்றில் சிறப்பான இடத்தைத் தேடாதீர்கள். யார் அவ்வாறு செய்கிறாரோ (அவருக்கு) நரகமே; நரகமே.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(இப்னுமாஜா: 254)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ قَالَ: أَنْبَأَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ، وَلَا لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ، وَلَا تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَالنَّارُ النَّارُ»


Ibn-Majah-Tamil-250.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-254.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-250.




1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-254 ,

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26543-இப்னு ஜுரைஜ் பலமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்று இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்ற பலர் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/616, தக்ரீபுத் தஹ்தீப்-1/624, தஃரீஃபு அஹ்லித் தக்தீஸ்-1/141)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

என்றாலும் இந்தச் செய்தி, தாரீகு வாஸித்-366 இல் சரியான அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ளது என்பதால் இது ஸஹீஹுன் லிஃகைரிஹீ ஆகும்.


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீகு வாஸித்-366.

«تاريخ واسط» (ص128):
حدثنا أسلم، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ حَرْبٍ الشَّيْبَانِيُّ، قَالَ ثنا سليمان بن بداد بْنِ عَبْدِ الرَّحْمَنِ الثَّقَفِيُّ، قَالَ: ثنا سِنَانٌ أَبُو مُعَاوِيَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم «مَنْ تَعَلَّمَ الْعِلْمَ لِيُبَاهِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ، فَهُوَ في النار» .
حدثنا أسلم، قال: ثنا محمد بن عبد الملك، قال: سمعت يزيد بن هارون، وذكر له هذا الحديث، فقال: سليمان ثقة، وشيبان ثقة

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கற்றவர்களிடம் பெருமையடிப்பதற்காகவும், கல்லாதவர்களிடம் விவாதம் செய்வதற்காகவும், மக்களை தன்பக்கம் திருப்புவதற்காகவும் கல்வி கற்பவர் நரகத்தில் இருப்பார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

இந்தச் செய்தியில் இரண்டு அறிவிப்பாளர்தொடர் உள்ளது.

1 . அஸ்லம் பின் ஸஹ்ல் (நூலாசிரியர்) —> முஹம்மது பின் ஹர்ப்-ஷைபானீ —> ஸுலைமான் பின் ஸியாத் —> ஸினான்-அபூமுஆவியா —> கதாதா —> அனஸ் (ரலி)

இதில் வரும் ஸுலைமான் பின் ஸியாத் அஸ்ஸகஃபீ யார் என்பதில் குழப்பம் உள்ளது. சிலர் ஸுலைமான் பின் ஸியாத் அல்வாஸிதீ, அஸ்ஸகஃபீ என்று கூறி இவர் மிக பலவீனமானவர் என்று கூறுகின்றனர். வேறு சிலர் இவர் அறியப்படாதவர் என்று கூறுகின்றனர்.

(நூல்: லிஸானுல் மீஸான்-4/153)

இதைப் பதிவு செய்த நூலாசிரியர் ஸுலைமான் என்பவரை பலமானவர் என்று கூறியுள்ளார்.

2 . அஸ்லம் பின் ஸஹ்ல் (நூலாசிரியர்) —> முஹம்மது பின் அப்துல்மலிக் —> யஸீத் பின் ஹாரூன் —> ஸினான்-அபூமுஆவியா —> கதாதா —> அனஸ் (ரலி)

இந்த அறிவிப்பாளர்தொடர் சரியானது.

என்றாலும் ஹைஸமீ அவர்கள், மேற்கண்ட அனஸ் (ரலி) வழியாக வரும் செய்தியை பதிவு செய்யும்போது இந்த நூலையும், இதில் இடம்பெறும் 2 வது அறிவிப்பாளர்தொடரையும் குறிப்பிடவில்லை. தப்ரானீ அவ்ஸத், பஸ்ஸாரில் இடம்பெறும் முதல் அறிவிப்பாளர்தொடரை மட்டுமே குறிப்பிட்டுவிட்டு இதில் இடம்பெறும் ஸுலைமான் பின் ஸியாத் (ஷைபான்-அபூமுஆவியாமிடமிருந்து) தனித்து அறிவித்துள்ளார் என்ற தகவலை மட்டும் கூறியுள்ளார்.

«مجمع الزوائد ومنبع الفوائد» (1/ 183):
‌‌[بَابٌ فِيمَنْ طَلَبَ الْعِلْمَ لِغَيْرِ اللَّهِ]
864 – عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَنْ تَعَلَّمَ الْعِلْمَ لِيُبَاهِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ يُمَارِيَ بِهِ السُّفَهَاءَ، أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ – فَهُوَ فِي النَّارِ».
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ، وَالْبَزَّارُ، وَفِيهِ سُلَيْمَانُ بْنُ زِيَادٍ الْوَاسِطِيُّ قَالَ الطَّبَرَانِيُّ وَالْبَزَّارُ: تَفَرَّدَ بِهِ سُلَيْمَانُ، زَادَ الطَّبَرَانِيُّ: وَلَمْ يُتَابَعْ عَلَيْهِ، وَقَالَ صَاحِبُ الْمِيزَانِ: لَا نَدْرِي مَنْ ذَا

இந்தச் செய்தியை ஸினான்-அபூமுஆவியாமிடமிருந்து யஸீத் பின் ஹாரூன் அறிவித்துள்ளார்.

(இந்தச் செய்தியில் ஸினான்-அபூமுஆவியா என்று இடம்பெற்றுள்ளது. மற்ற செய்திகளில் ஷைபான்-அபூமுஆவியா என்று இடம்பெற்றுள்ளது. இருவருமே வேவ்வேறு அறிவிப்பாளர்கள் என்பதுடன் இருவருமே பலமானவர்கள் தான்)


لسان الميزان ت أبي غدة (4/ 153)
3616 – سليمان بن زياد الثقفي الواسطي.
عن شيبان النحوي.لا يدرى من ذا. وأتى بحديث باطل رواه عنه المفضل الغلابي. انتهى. وهذا أيضًا ذكره العقيلي وساق حديثه عن شيبان عن قتادة، عَن أَنس رفعه: من طلب العلم ليماري به السفهاء … الحديث.
قال: وفي الباب عن جماعة من الصحابة لينة الأسانيد كلها قال: وقال الغلابي: حدثت يحيى بن مَعِين عنه بهذا الحديث وبحديثين آخرين فقال: هذه الأحاديث بواطل.

الضعفاء الكبير للعقيلي ط-أخرى (2/ 509)
617 – سُليمان بن زياد الثَّقَفي الواسِطيّ.
2216 – حَدثنا مُحمد بن زَكَريا البَلخي، قال: حَدثنا المُفَضَّل بن غَسان الغَلابي، قال: حَدَّثت يَحيَى بن مَعِين، عن سُليمان بن زياد الواسِطي، عن شَيبان، عن قَتادة، عن أَنس، أَنَّ النَّبي صَلى الله عَليه وسَلم قال: مَن طَلَب العِلم ليُباهي به العُلَماء، أو يُماري به السُّفَهاء، أَو يَصرِف به وجُوه الناس إِلَيه، فَهو في النارِ.
قال الغَلابيُّ: وذَكَرت ليَحيَى بن مَعِين حَديثين آخَرين مِن حَديث هَذا الشَّيخ سُليمان بن زياد، فقال يحيى: هَذه الأَحاديث بَواطيلُ.
قال أَبو جَعفر: في هَذا الباب أَحاديث عن جَماعَة مِن أَصحاب النَّبي صَلى الله عَليه وسَلم لَيِّنَة الأَسانيد، عن النَّبي صَلى الله عَليه وسَلم.

இந்தக் கருத்தில் ஸுலைமான் பின் ஸியாத் அறிவிக்கும் செய்திகள் பற்றி முஃபள்ளல் பின் ஃகஸ்ஸான் அல்ஃகல்லாபீ அவர்கள் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்களிடம் கேட்டபோது இந்தசெய்திகள் பொய்யானவை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
கூறினார்.

(நூல்: லிஸானுல் மீஸான்-4/153, அள்ளுஅஃபாஉல் கபீர்-உகைலீ-2216)

இதில் இடம்பெறும் ஸுலைமான் பின் ஸியாத் பலவீனமானவர் என்பதால் தான் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவ்வாறு கூறியுள்ளார்.

உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள், இந்தச் செய்தி வேறு சில நபித்தோழர்கள் வழியாகவும் வந்துள்ளது. இவைகளில் சிறிது பலவீனம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-253 .

4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-260 .

5 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

6 . மக்ஹூல் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


7 . கஅப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2654 .

8 . ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-259 .

9 . முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

10 . உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

11 . ஒரு மனிதர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.