தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4024

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபோது (அவர்களை நலம் விசாரிக்க) நான் சென்றேன். அப்போது அவர்கள் மீது என் கையை வைத்தேன். அவர்களின் (மீதிருந்த) போர்வையின் மேலிருந்து கூட நான் காய்ச்சலின் வெப்பத்தை உணர்ந்தேன்.

உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு இவ்வளவு கடுமையான காய்ச்சல் இருக்கிறதே!” என்று கூறினேன். அதற்கவர்கள் ‘நாங்கள் (நபிமார்கள்) அப்படித்தான் சோதனை எங்களுக்குப் பலமடங்கு இருக்கும்; அதனால் (அல்லாஹ்வின்) கூலியும் எங்களுக்கு பலமடங்கு கிடைக்கும்’ என்று கூறினார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகம் சோதிக்கப்பட்டோர் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “நபிமார்கள்” என்று பதிலளித்தார்கள். அவர்களை அடுத்து யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “நல்லோர்கள்” என்று கூறிவிட்டு,

“அவர்கள் எந்தளவிற்கு வறுமையால் சோதிக்கப்பட்டார்கள் என்றால் அவர்கள் போர்த்திக்கொள்ளும் ஒரு ஆடையைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இருக்காது. மேலும் உங்களில் ஒருவருக்கு செல்வசெழிப்பும் வசதியும் கிடைக்கும்போது அவர் எந்தளவிற்கு மகிழ்ச்சி அடைவாரோ அது போன்று அவர்கள் சோதனைகளால் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று கூறினார்கள்.

(இப்னுமாஜா: 4024)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ قَالَ: حَدَّثَنِي هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ:

دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُوعَكُ، فَوَضَعْتُ يَدِي عَلَيْهِ فَوَجَدْتُ حَرَّهُ بَيْنَ يَدَيَّ فَوْقَ اللِّحَافِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا أَشَدَّهَا عَلَيْكَ قَالَ: «إِنَّا كَذَلِكَ يُضَعَّفُ لَنَا الْبَلَاءُ، وَيُضَعَّفُ لَنَا الْأَجْرُ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الْأَنْبِيَاءُ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ الصَّالِحُونَ،

إِنْ كَانَ أَحَدُهُمْ لَيُبْتَلَى بِالْفَقْرِ، حَتَّى مَا يَجِدُ أَحَدُهُمْ إِلَّا الْعَبَاءَةَ يَحُوبُهَا، وَإِنْ كَانَ أَحَدُهُمْ لَيَفْرَحُ بِالْبَلَاءِ، كَمَا يَفْرَحُ أَحَدُكُمْ بِالرَّخَاءِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4024.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-4022.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47251-ஹிஷாம் பின் ஸஃத் முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பாளர் ஆவார். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் இவரின் செய்தியை துணை ஆதரமாகக் கூறியுள்ளார். இவரைப் பற்றி அறிஞர்களின் கருத்தைப் பார்க்கும் போது இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் குறையுள்ளவர் என்று தெரிகிறது.
  • இவரை இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம், தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    போன்றோர் ஹஸன் தரத்தில் கூறியுள்ளனர். அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், ஸைத் பின் அஸ்லம் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் இவரின் கூற்றுக்கே முதலிடம் என்று கூறியுள்ளார். அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    போன்றோர் இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம்; ஆனால் தனி ஆதரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளனர். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இன்னும் சில அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-6577, ஸியரு அஃலாமுன் நுபலா-7/344, தஹ்தீபுத் தஹ்தீப்-4/270, அல்காஷிஃப்-5964…)

  • எனவே இவரின் செய்திகளை மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக உள்ளதா? இல்லையா? என்று பார்த்தே ஏற்கவேண்டும்; மற்ற பலமானவர்களைப் போன்று அறிவித்திருக்கும் போதும்; இவர் மனனத்தில் தவறு செய்யவில்லை என்பதற்கு வேறு ஆதாரம் கிடைக்கும் போதும் இவரின் செய்திகள் ஏற்கப்படும். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இவர் விசயத்தில் இவ்வாறே முடிவு செய்துள்ளார்.
  • இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் சரியானது என்று கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-144).
  • ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள், இதனை பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்று கூறியுள்ளார். அவர் கூறும் காரணம், ஹிஷாம் பின் ஸஃத் பலவீனமானவர். மேலும் ஸைத் பின் அஸ்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மஃமர் பின் ராஷித் பிறப்பு ஹிஜ்ரி 95
    இறப்பு ஹிஜ்ரி 153
    வயது: 58
    அவர்கள் ஸைத் பின் அஸ்லம் அவர்களுக்கும், அபூஸயீத் (ரலி) அவர்களுக்குமிடையில் ஒரு மனிதர் என்று அறிவித்துள்ளார். ஆனால் ஹிஷாம் பின் ஸஃத் அதாஉ பின் யஸாரை கூறியுள்ளார். எனவே ஹிஷாம், பலமான அறிவிப்பாளரான மஃமருக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • என்றாலும் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்களின் கருத்துப்படியும், ஸைத் பின் அஸ்லம் அவர்களுக்கு நெருக்கமானவர் ஹிஷாம் பின் ஸஃத் என்ற அடிப்படையிலும், இந்தக் செய்தியை சரியானது என்று முடிவு செய்தாலும் இந்த செய்தியின் இறுதி பகுதியை இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். மேலும் அதில் இடம்பெறும் “போர்த்திக்கொள்ளும் போர்வை” என்ற வார்த்தை அமைப்பு குளறுபடியாக வந்துள்ளது. எனவே இந்த செய்தியை ஹிஷாம் பின் ஸஃத் சரியாக மனனமிடவில்லை என்பதற்கு வாய்ப்பு உள்ளது என்ற சந்தேகத்தால் இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமாகிறது.

3 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-510 , இப்னு மாஜா-4024 , முஸ்னத் அபீ யஃலா-1045 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2210 , அல்முஃஜமுல் அவ்ஸத்-9047 , ஹாகிம்-119 , 7848 , குப்ரா பைஹகீ-6533 ,

  • ஸைத் பின் அஸ்லம் —> ஒரு மனிதர் —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21550 , அஹ்மத்-11893 ,

மேலும் பார்க்க: அஹ்மத்-27079 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.