தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4252

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அப்துல்லாஹ் பின் மஃகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் எனது தந்தை (மஃகில் பின் முகர்ரின்-ரலி) யுடன் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது, இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், (ஒருவர் தான் செய்த) பாவத்தை நினைத்து வருந்துவதே பாவமன்னிப்புத் தேடுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்.

அதற்கு என் தந்தை, இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்களே நேரடியாக செவியேற்றீர்களே? என்று கேட்டார். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

(இப்னுமாஜா: 4252)

هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ زِيَادِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنِ ابْنِ مَعْقِلٍ، قَالَ:

دَخَلْتُ مَعَ أَبِي عَلَى عَبْدِ اللَّهِ، فَسَمِعْتُهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «النَّدَمُ تَوْبَةٌ» ، فَقَالَ لَهُ أَبِي: أَنْتَ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «النَّدَمُ تَوْبَةٌ» ، قَالَ: نَعَمْ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4252.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




இந்த செய்தி பல வகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

  • சில அறிவிப்பாளர் தொடர்களில் இதில் வரும் ராவீ-23398-அப்துல் கரீம் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அல்ஜஸரீ
    அவர்கள், ராவீ-16260-ஸியாத் பின் அபூமர்யமிடமிருந்து அறிவிப்பதாகவும்,
  • சில அறிவிப்பாளர் தொடர்களில் ராவீ-16269-ஸியாத் பின் ஜர்ராஹ் அவர்களிடமிருந்து அறிவிப்பதாகவும் வந்துள்ளது.
  • இருவரும் ஒருவரே என்று புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    போன்ற அறிஞர்கள் கூறினாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்ற அறிஞர்கள் இருவரும் வெவ்வேறானவர்கள் என்பதற்கு ஆதாரங்களை கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/653, )

  • ஸியாத் பின் ஜர்ராஹ் பலமானவர் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். ஸியாத் பின் அபூமர்யம் என்பவரை முற்கால அறிஞர்களில் இப்னு ஹிப்பானும், இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அவர்களும் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்களும் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்ற அறிஞர்கள் இதைப் பற்றி விரிவாக கூறி அப்துல் கரீம் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அவர்கள், ஸியாத் பின் ஜர்ராஹ் அவர்களிடமிருந்து அறிவிப்பதே சரியானது என்று கூறியுள்ளனர்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-1797, அல்இலலுல் வாரிதா-813)

  • மிஸ்ஸீ அவர்கள், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்களுக்கும் முஸ்அப் பின் ஸயீத் அவர்களுக்கும் நடைபெற்ற உரையாடலை குறிப்பிட்டு இந்த செய்தியை அப்துல் கரீம் பின் மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இருவரிடமும் கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-2068)

1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்லாஹ் பின் மஃகில் (ரஹ்) —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-380 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-27752 , அஹ்மத்-3568 , 4124 , இப்னு மாஜா-4252 , முஸ்னத் பஸ்ஸார்-1926 , 1927 , முஸ்னத் அபீ யஃலா-4969 , 5081 , 5129 , ஷரஹு மஆனில் ஆஸார்-6963 , 6965 , 6966 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-1465 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5864 , 6799 , அல்முஃஜமுஸ் ஸகீர்-80 , ஹாகிம்-7612 , 7613 , குப்ரா பைஹகீ-20558 , 20559 ,

  • அப்துல்லாஹ் பின் மஃகில் (ரஹ்) —> மஃகில் பின் முகர்ரின் (ரலி) —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-27751 , அஹ்மத்-4012 , 4014 , 4016 ,

  • கைஸமா —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: இப்னு ஹிப்பான்-612 , 614 ,

  • கைஸமா —> ஒரு மனிதர் —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-5261 ,

  • அப்துல் கரீம் —> ஒரு மனிதர் —> அவரின் தந்தை —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: ஷரஹு மஆனில் ஆஸார்-6964 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-1466 ,

  • ஸுஹைர் —> அப்துல் கரீம் —> அப்துல்லாஹ் பின் முகஃப்பல்

பார்க்க: ஷரஹு மஆனில் ஆஸார்-6967 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.