தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-48

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔

48. “ஒரு சமுதாயம் நேர்வழியில் இருந்த பிறகு அதிலிருந்து வழி தவறுவதற்கு, விதண்டாவாதம் செய்வது தவிர வேறெதுவும் (அவர்களுக்கு) கொடுக்கப்படுவதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு,

“எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?” என்று அவர்கள் கேட்கின்றனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!” (அல்குர்ஆன்: 43:58) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஉமாமா (ரலி)

அபூஉமாமா-அல்பாஹிலீ (ரலி) – Abu Umama al-Bahili

இறப்பு: ஹிஜ்ரி 86, ஹிம்ஸ்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: சுதை பின் அஜ்லான் பின் வஹ்ப்

தந்தை பெயர்: அஜ்லான் பின் வஹ்ப்

வம்சம்: அல்பாஹிலீ

புனைப்பெயர்: அபூஉமாமா

பயணித்த ஊர்கள்: மதீனா, எகிப்து, ஹிம்ஸ், ஷாம்

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 86, ஹிம்ஸ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூஉமாமா ரலி அவர்களின் இயற்பெயர் சுதை பின் அஜ்லான் பின் வஹ்ப் ஆகும். இவர் ஒரு நபித்தோழர். இவர் ஹிஜாஸில் பிறந்தார்.

மதீனா, எகிப்து, ஹிம்ஸ், ஷாம் ஆகிய இடங்களில் வசித்தார். இவர் ஹிஜ்ரி 86 ஆம் ஆண்டு ஹிம்ஸில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபீ தாலிப் (ரலி), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), அம்ர் பின் அப்சா அஸ்ஸலமீ (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): சுலைமான் பின் ஹபீப் அல்மஹாரபீ, ஷத்தாத் பின் அப்துல்லாஹ், முஹம்மத் பின் ஸியாத் அல்அல்ஹானீ, மம்தூர் அஸ்வத் அபூஸல்லாம், மக்ஹூல் அஷ்ஷாமீ, ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அல்அஷ்அரீ, காஸிம் பின் அப்துர்ரப், ரஜா பின் ஹய்வா, ஸல்ம் பின் அபில் ஜஃத், காலித் பின் மஃதான், அபூ ஃகாலிப் அர்ராஸிபீ, சுலைம் பின் ஆமிர் அல்குலாஈ

வேறு பெயர்கள்: அபூ இமாமா


ஆதாரம்: muslimscholars.info (4048) · Should verify


حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، ح وَحَدَّثَنَا حَوْثَرَةُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَا: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا الْجَدَلَ» ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ {بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ} [الزخرف: 58]


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-48.
Ibn-Majah-Alamiah-47.
Ibn-Majah-JawamiulKalim-47.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: திர்மிதீ-3253.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.