நபி (ஸல்) அவர்கள், ஸுப்ஹு தொழுகையில் ஸலாம் கூறிய பின்பு “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஆ, வ ரிஸ்க்கன் தய்யிபா, வ அமலம் முதகப்பலா” என்று கூறுவார்கள்.
(பொருள் : யா அல்லாஹ்! பயன்தரக்கூடிய கல்வியையும், ஹலாலான-தூய்மையான வாழ்வாதாரத்தையும், ஏற்கப்படும் நற்செயல்களையும் உன்னிடம் கேட்கிறேன்)
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
(இப்னுமாஜா: 925)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ مَوْلًى لِأُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ:
إِذَا صَلَّى الصُّبْحَ حِينَ يُسَلِّمُ «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-925.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-915.
- இதன் அறிவிப்பாளர்தொடரில், உம்மு ஸலமா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் அடிமை யார் என்பது பற்றி எந்த நூலிலும் குறிப்பு இல்லை என்பதால் இவர் அறியப்படாதவர் என்ற தரத்தில் உள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-26521 , 26602 , 26700 , 26701 , 26731 , இப்னு மாஜா-925 ,
சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-5266 .
சமீப விமர்சனங்கள்