தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3932

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

நிபந்தனையிட்டு அடிமையை உரிமை விடுவது.

ஸஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஆரம்பத்தில் நபி-ஸல்-அவர்களின் மனைவியரில் ஒருவரான) உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையாக இருந்து வந்தேன். ஒரு தடவை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் என்னிடம், “நீ வாழும் வரை நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின்படி உன்னை உரிமை விடுகிறேன்” என்று கூறினார்கள்.

அதற்கு, “நீங்கள் இந்த நிபந்தனையை கூறாவிட்டாலும் நான் வாழும் வரை நபி (ஸல்) அவர்களை விட்டு பிரியமாட்டேன்” என்று கூறினேன். அவர்கள் அந்த நிபந்தனையை கூறியே என்னை உரிமை விட்டார்கள்.

(அபூதாவூத்: 3932)

بَابٌ فِي الْعِتْقِ عَلَى الشَّرْطِ

حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ جُمْهَانَ، عَنْ سَفِينَةَ، قَالَ:

كُنْتُ مَمْلُوكًا لِأُمِّ سَلَمَةَ فَقَالَتْ: أُعْتِقُكَ وَأَشْتَرِطُ عَلَيْكَ أَنْ تَخْدُمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عِشْتَ فَقُلْتُ: «وَإِنْ لَمْ تَشْتَرِطِي عَلَيَّ مَا فَارَقْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عِشْتُ فَأَعْتَقَتْنِي، وَاشْتَرَطَتْ عَلَيَّ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3932.
Abu-Dawood-Alamiah-3430.
Abu-Dawood-JawamiulKalim-3432.




  • இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
  • சிலர் மூன்று செய்திகளைச் சேர்த்தும், சிலர் ஒவ்வொரு செய்தியாக  தனித்தனியாகவும் அறிவித்துள்ளனர்.

மூன்று செய்திகள்:

1 . ஸஃபீனா (ரலி) ஆரம்பத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையாக இருந்தது.

பார்க்க: அபூதாவூத்-3932.

2 . ஸஃபீனா என்ற பெயருக்கு காரணம்.

பார்க்க: அஹ்மத்-21925.

3 . கிலாஃபத் ஆட்சி முப்பது வருடங்கள்.

பார்க்க: திர்மிதீ-2226.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . முஸத்தத் பின் முஸர்ஹத்

3 . அப்துல்வாரிஸ் பின் ஸயீத்

4 . ஸயீத் பின் ஜும்ஹான்

5 . ஸஃபீனா-அபூஅப்துர்ரஹ்மான் (ரலி)

6 . உம்மு ஸலமா (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17247-ஸயீத் பின் ஜும்ஹான் என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்களிடம், இவரை யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    பொருந்திக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே என்று கேட்கப்பட்டபோது அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் அது தவறான தகவல் என்று கூறி கோபபட்டார். மேலும் இவரை இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    தான் சிறிது விமர்சித்துள்ளார். யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் விமர்சிக்கவில்லை என்று கூறினார்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவரின் செய்தியில் சில ஆச்சரியங்கள் இருக்கும் என்று கூறியுள்ளார். (இதன் பொருள் இவர் சில செய்திகளை தனித்து (முன்கராக) அறிவித்துள்ளார் என்பதாகும்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம். (தனி) ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
  • நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகியோர் இவரை நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும்; சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/10, அல்காமில்-4/456, தஹ்தீபுல் கமால்-10/376, அல்இக்மால்-5/271, அல்காஷிஃப்-2/474, தஹ்தீபுத் தஹ்தீப்-2/11, தக்ரீபுத் தஹ்தீப்-1/375)


تاريخ ابن معين – رواية الدوري (3/ 42):
170 – سَمِعت يحيى يَقُول ‌سفينة ‌مولى ‌أم ‌سَلمَة ‌يكنى ‌أَبَا ‌عبد ‌الرَّحْمَن

உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையான ஸஃபீனா (ரலி) அவர்களின் புனைப்பெயர் அபூஅப்துர்ரஹ்மான் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
கூறியதாக அப்பாஸ் அத்தூரீ அறிவித்துள்ளார்.

(நூல்: தாரீகு இப்னு மயீன்-170, 3/42)


تذهيب تهذيب الكمال في أسماء الرجال (4/ 86)
2451 – سفينة، مولى رسول الله -صلى الله عليه وسلم-، وكان عبدًا لأم سلمة فأعتقته، وشرطت عليه أن يخدم النبي -صلي الله عليه وسلم- ما عاش.

நபி (ஸல்) அவர்களின் அடிமையான ஸஃபீனா என்பவர், ஆரம்பத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையாக இருந்தார் என்ற தகவலை (மேற்கண்ட செய்தியின் அடிப்படையில்) தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இமாம் கூறியுள்ளார்.

(நூல்: தத்ஹீபுத் தஹ்தீப்-4/86)


ஸயீத் பின் ஜும்ஹான் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் இது ஹஸன் தர செய்தியாகும்.


1 . இந்தக் கருத்தில் ஸஃபீனா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

  • ஸயீத் பின் ஜும்ஹான் —> ஸஃபீனா (ரலி) —> உம்மு ஸலமா (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-2526, அபூதாவூத்-3932, குப்ரா நஸாயீ-, இப்னுல் ஜாரூத்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-21925, இப்னு மாஜா-925,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.