தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21925

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

ஸஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். கூட்டத்தில் சிலர் களைப்படையும் போது வாளையும், கேடயத்தையும், ஈட்டியையும் என்னிடம் தந்துவிடுவார்கள். இறுதியில் அதிகமான பொருட்களை நான் சுமந்து வர ஆரம்பித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ ஸஃபீனா (கப்பல்) என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 21925)

حَدَّثَنَا عَفَّانُ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ جُمْهَانَ، عَنْ سَفِينَةَ، قَالَ:

كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَكُلَّمَا أَعْيَا بَعْضُ الْقَوْمِ أَلْقَى عَلَيَّ سَيْفَهُ وَتُرْسَهُ وَرُمْحَهُ، حَتَّى حَمَلْتُ مِنْ ذَلِكَ شَيْئًا كَثِيرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ سَفِينَةُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21925.
Musnad-Ahmad-Alamiah-20915.
Musnad-Ahmad-JawamiulKalim-21364.




  • இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
  • சிலர் மூன்று செய்திகளைச் சேர்த்தும், சிலர் ஒவ்வொரு செய்தியாக  தனித்தனியாகவும் அறிவித்துள்ளனர்.

மூன்று செய்திகள்:

1 . ஸஃபீனா (ரலி) ஆரம்பத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையாக இருந்தது.

பார்க்க: அபூதாவூத்-3932.

2 . ஸஃபீனா என்ற பெயருக்கு காரணம்.

பார்க்க: அஹ்மத்-21925.

3 . கிலாஃபத் ஆட்சி முப்பது வருடங்கள்.

பார்க்க: திர்மிதீ-2226.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . அஃப்பான் பின் முஸ்லிம்

3 . ஹம்மாத் பின் ஸலமா

4 . ஸயீத் பின் ஜும்ஹான்

5 . ஸஃபீனா-அபூஅப்துர்ரஹ்மான் (ரலி)


1 . இந்தக் கருத்தில் ஸஃபீனா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸயீத் பின் ஜும்ஹான் —> ஸஃபீனா (ரலி) 

பார்க்க: அஹ்மத்-21921, 21925, 21932, முஸ்னத் பஸ்ஸார்-3830, அல்முஃஜமுல் கபீர்-6439, 6440, 6441,


  • ஷரீக் பின் அப்துல்லாஹ் —> இம்ரான் அந்நக்லீ —> ஸஃபீனா (ரலி) 

பார்க்க: அஹ்மத்-21924,


  • ஹஷ்ரஜ் பின் நுபாதா —> ஸஃபீனா (ரலி) 

பார்க்க: அஹ்மத்-21928, ஹாகிம்-6548,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3932,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.