தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-19066

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19066. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜத்வு) ஆறுமாத செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம்.

அறிவிப்பவர் : (ரலி)

உக்பா பின் ஆமிர் (ரலி)

عقبة بن عامر الجهني

இறப்பு: ஹிஜ்ரி 58, எகிப்து

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: உக்பா பின் ஆமிர் பின் அப்ஸ் பின் அம்ர் பின் அதீ பின் அம்ர் பின் ரிஃபாஆ பின் மவ்தூஆ பின் அதீ பின் ஃகன்ம் பின் அர்ரப்ஆ

தந்தை பெயர்: ஆமிர் பின் அப்ஸ்

வம்சம்: ஜுஹைனா

புனைப்பெயர்: அபூ அஸ்அத், அபூ அப்ஸ், அபூ ஆமிர், அபூ ஹம்மாத், அபூ ஸஅத், அபூ அம்ர், அபூ அஸ்வத்

ஊர் பெயர்: ஹிஜாஸ்

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம், எகிப்து

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 58, எகிப்து

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

உக்பா பின் ஆமிர் ரலி அவர்கள் நபித்தோழர் ஆவார். இவர் எகிப்தை வெற்றி கொண்ட முஸ்லிம் படைகளின் தளபதிகளில் ஒருவராக இருந்தார். முஆவியா ரலி அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டுகள் எகிப்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.

இவர் ஒரு அறிஞர், குர்ஆன் ஓதுபவர், சட்ட வல்லுநர் மற்றும் கவிஞர் ஆவார். ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு எகிப்தில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ உமாமா அல்பாஹிலீ, இப்னு அப்பாஸ், கைஸ் பின் அபூஹாஸிம், ஜுபைர் பின் நுஃபைர் அல்ஹள்ரமீ, பஃஜா பின் அப்துல்லாஹ், தகீன் பின் ஆமிர் அல்ஹஜ்ரீ, ரப்ஈ பின் ஹராஷ், சுமாமா பின் ஷஃபீ, அப்துர்ரஹ்மான் பின் ஷமாஸா, அலீ பின் ரபாஹ், மர்ஸத் பின் அப்துல்லாஹ் அல்யஸனீ, முஷ்ரஹ் பின் ஹாஆன் அல்மஃஆஃபிரீ

வேறு பெயர்கள்: அபூ ஹம்மாத், அபூ ஸஅத், அபூ அம்ர், அபூ அஸ்வத், அபூ அஸ்அத், அபூ அப்ஸ், உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ


ஆதாரம்: muslimscholars.info (189) · Should verify


وَأَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ، أنبأ أَبُو الْحَسَنِ الْمِصْرِيُّ، ثنا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ صَالِحٍ، ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، ثنا بَكْرُ بْنُ مُضَرَ، ثنا عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللهِ، حَدَّثَهُ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ:

ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِذَاعٍ مِنَ الضَّأْنِ.

وَرَوَاهُ وَكِيعٌ وَابْنُ وَهْبٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ اللَّيْثِيِّ , عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللهِ بْنِ خُبَيْبٍ الْجُهَنِيِّ قَالَ: سَأَلْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ عَنِ الْجَذَعِ مِنَ الضَّأْنِ , فَقَالَ: ضَحِّ بِهِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-19066.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-17543.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48457-யஹ்யா பின் உஸ்மான் பற்றி இப்னு யூனுஸ் அவர்கள், இவர் ஊரின் வரலாற்றையும் அறிஞர்களின் இறந்த வருடங்களையும் அறிந்தவர். ஹதீஸ்களை மனனமிட்டவர். மற்றவர்களிடம் கிடைக்காத செய்தி இவரிடம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால் 31/462)
  • என்றாலும் தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்ற அறிஞர்கள், இவர் மற்றவர்களின் நூலிலிருந்து சில ஹதீஸ்களை அறிவித்திருப்பதால் சிலர் விமர்சித்துள்ளனர் என்று கூறியுள்ளனர். (நூல்: அல்காஷிஃப் 4/492, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/1062)

மேலும் பார்க்க: நஸாயீ-4382 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.