அபூஸலமா (ரஹ்), ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கீழ்க்கண்டவாறு) கூறியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது:
குர்பானி கொடுப்பதை தாமதப்படுத்த விரும்புகிறவர் துல்ஹஜ் மாதத்தின் இறுதி வரை கொடுக்கலாம்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இது அபூநுஐம் அஸ்பஹானீ அவர்களின் வார்த்தை அமைப்பாகும்.
அபூஹாமித் அவர்களின் அறிவிப்பில், “குர்பானி கொடுப்பதை தாமதப்படுத்த விரும்புகிறவர் முஹர்ரம் பிறை தெரியும் வரை கொடுக்கலாம்” என்று இடம்பெற்றுள்ளது.
இதை அபூதாவூத் அவர்கள் தனது ‘அல்மராஸீல்’ எனும் நூலில் முஸா பின் இஸ்மாயீல் —> அபான் என்ற அறிவிப்பாளர்தொடரில் பதிவு செய்துள்ளார்.
(பைஹகீ-குப்ரா: 19256)بَابُ مَنْ قَالَ الضَّحَايَا إِلَى آخِرِ الشَّهْرِ لِمَنْ أَرَادَ أَنْ يَسْتَأْنِيَ ذَلِكَ
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ الْأَصْبَهَانِيُّ، أنبأ عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ، ح وَأَخْبَرَنَا أَبُو حَامِدٍ أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْحَافِظُ , أنبأ زَاهِرُ بْنُ أَحْمَدَ، قَالَا: ثنا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ، ثنا أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ، ثنا حَبَّانُ بْنُ هِلَالٍ، ثنا أَبَانُ بْنُ يَزِيدَ، ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، وَسُلَيْمَانُ بْنُ يَسَارٍ، أَنَّهُ بَلَغَهُمَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
” الضَّحَايَا إِلَى آخِرِ الشَّهْرِ لِمَنْ أَرَادَ أَنْ يَسْتَأْنِيَ ذَلِكَ “. لَفْظُ حَدِيثِ الْأَصْبَهَانِيِّ
وَفِي رِوَايَةِ أَبِي حَامِدٍ أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” الضَّحَايَا إِلَى هِلَالِ الْمُحَرَّمِ لِمَنْ أَرَادَ أَنْ يَسْتَأْنِي ذَلِكَ ”
رَوَاهُ أَبُو دَاوُدَ فِي الْمَرَاسِيلِ عَنْ مُوسَى بْنِ إِسْمَاعِيلَ عَنْ أَبَانَ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-19256.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்