தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-21440

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 201

முடி (யை பராமரித்தல்)

நீ முடியை வளர்த்தால் (அதை சரியாக பராமரித்து) அதற்கு மதிப்பளி! என்று அபூகதாதா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே அபூகதாதா (ரலி) அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை (என்று கருதுகிறேன்) தலைவாரக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)

(musannaf-abdur-razzaq-21440: 21440)

201- بَابُ الشَّعْرِ.

أخبرنا عبد الرزاق، عَنْ مَعْمَرٍ، عَن سَعيدِ بْنِ عَبدِ الرَّحْمَنِ الْجَحْشِيِّ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لأَبِي قَتَادَةَ: إِنِ اتَّخَذْتَ شَعَرًا فَأَكْرِمْهُ، قَالَ: وَكَانَ أَبو قَتَادَةَ، حَسِبْتُ، يُرَجِّلُهُ كُلَّ يَوْمٍ مَرَّتَيْنِ.


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-21440.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் அல்ஜஹ்ஷீ என்பவர் தாபிஈன்களில் ஐந்தாவது படித்தரத்தில் உள்ளவர். (அதாவது இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் தனது தக்ரீபில் கூறும்போது இந்த வகையினர் ஒன்றிரண்டு நபித்தோழர்களை பார்த்திருப்பார்கள். ஆனால் அந்த நபித்தோழர்களிடம் ஹதீஸைக் கேட்டார்களா? என்பதற்கு பலமான ஆதாரம் இருக்காது என்று கூறியுள்ளார்).
  • மேற்கண்ட செய்தியில் ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள், அபூகதாதா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்திருக்கலாம் என்று தெரிந்தாலும் இவருக்கும், அபூகதாதா (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு அறிவிப்பாளர் விடுப்பட்டுள்ளார். ஷுஅபுல் ஈமான்-6038 இல் அந்த அறிவிப்பாளர் சில ஆசிரியர்கள் என்று இடம்பெற்றுள்ளது. அவர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமாகிறது.

(குறிப்பு: இவரின் பெயர் ஸயீத் பின் அப்துர்ரஹ்மான்அல்ஜஹ்ஷீ என்பதே சரியாகும். சில அறிவிப்புகளில் அல்ஜுரஷீ என்று இடம்பெற்றிருப்பது தவறு என சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்)

மேலும் பார்க்க: ஷுஅபுல் ஈமான்-6038 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.