நீ முடியை வளர்த்தால் (அதை சரியாக பராமரித்து) அதற்கு மதிப்பளி! என்று அபூகதாதா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே அபூகதாதா (ரலி) அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை (என்று கருதுகிறேன்) தலைவாரக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் அவர்களின் ஆசிரியர்கள்.
(shuabul-iman-6038: 6038)أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ، أَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنَا مَعْمَرٌ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ، عَنْ أَشْيَاخِهِمْ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِأَبِي قَتَادَةَ: ” إِنِ اتَّخَذَتْ شَعْرًا فَأَكْرِمْهُ ” قَالَ: فَكَانَ أَبُو قَتَادَةَ حَسِبْتُ يُرَجِّلُهُ كُلَّ يَوْمٍ مَرَّتَيْنِ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-6038.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-5955.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17406-ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் அல்ஜஹ்ஷீ என்பவர் தாபிஈன்களில் ஐந்தாவது படித்தரத்தில் உள்ளவர். (அதாவது இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் தனது தக்ரீபில் கூறும்போது இந்த வகையினர் ஒன்றிரண்டு நபித்தோழர்களை பார்த்திருப்பார்கள். ஆனால் அந்த நபித்தோழர்களிடம் ஹதீஸைக் கேட்டார்களா? என்பதற்கு பலமான ஆதாரம் இருக்காது என்று கூறியுள்ளார்). - ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் அவர்களுக்கும், அபூகதாதா (ரலி) அவர்களுக்கும் இடையில் வரும் ஆசிரியர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
(குறிப்பு: இவரின் பெயர் ஸயீத் பின் அப்துர்ரஹ்மான்அல்ஜஹ்ஷீ என்பதே சரியாகும். சில அறிவிப்புகளில் அல்ஜுரஷீ என்று இடம்பெற்றிருப்பது தவறு என சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்)
6 . இந்தக் கருத்தில் ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் அவர்களின் சில ஆசிரியர்கள் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21440 , ஷுஅபுல் ஈமான்-6038 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-4163 .
சமீப விமர்சனங்கள்