அல்ஹைஸம் பின் ஹனஷ் அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களைப் பார்த்தார். அவருக்கு அருகில் நின்று தொழுதார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா; வல்ஹம்து லில்லாஹி கஸீரா; வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா; அல்லாஹும்மஜ்அல்க அஹப்ப ஷைஇன் இலைக; வ அஹ்ஸன ஷைஇன் இன்தீ ”
(பொருள்; அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்; அல்லாஹ்வே! எல்லாவற்றையும் விட உன்னையே எனக்கு பிரியமானதாக ஆக்கு; என்னிடத்தில் அழகானதாக ஆக்கு) என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்)
(musannaf-abdur-razzaq-2560: 2560)عَبْدُ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْهَيْثَمِ بْنِ حَنَشٍ،
أَنَّهُ رَأَى ابْنَ عُمَرَ وَصَلَّى مَعَهُ إِلَى جَنْبِهِ، فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ للَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، اللَّهُمَّ اجْعَلْكَ أَحَبَّ شَيْءٍ إِلَيَّ وَأَحْسَنَ شَيْءٍ عِنْدِي»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-2560.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-2471.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அல்ஹைஸம் பின் ஹனஷ் அவர்களின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை.
- இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளார். இவரிடமிருந்து அபூஇஸ்ஹாக் மட்டுமே அறிவித்துள்ளார் என கதீப் பக்தாதீ அவர்கள் கூறியுள்ளார்
(நூல்: லிஸானுல் மீஸான்-8303)
மேலும் பார்க்க: முஸ்லிம்-1052 .
சமீப விமர்சனங்கள்