தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-3748

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

தொழுகை மூன்று பாகங்களைக் கொண்டது. அதன் ஒரு பாகம் (தொழுவதற்கு முன் உளூ எனும்) தூய்மைச் செய்தல். மற்றொரு பாகம் ருகூஉ செய்தல், மற்றொரு பாகம் ஸஜ்தா செய்தல் ஆகியவை ஆகும்.

யார் அவற்றைப் பேணிப் பாதுகாத்து தொழுகிறாரோ, அவரது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். யார் அதில் குறை வைக்கிறாரோ, அவர் தனக்குத்தான் குறை வைத்துக் கொள்கிறார் என்று கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அபூஸாலிஹ்-தக்வான் (ரஹ்)

(musannaf-abdur-razzaq-3748: 3748)

عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ ذَكْوَانَ، عَنْ كَعْبٍ قَالَ:

” إِنَّ الصَّلَاةَ ثَلَاثَةُ أَثْلَاثٍ: ثُلْثٌ طَهُورٌ، وَثُلْثٌ رُكُوعٌ، وَثُلْثٌ سُجُودٌ، فَمَنْ حَافَظَ عَلَيْهِنَّ قُبِلْنَ مِنْهُ، وَمَنْ نَقَصَ فَإِنَّمَا يَنْقُصُ مِنْ نَفْسِهِ “


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-3748.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-3627.




கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் தாபிஈ ஆவார். இது இவரின் சொல்லாக வந்துள்ளதால் இது மக்தூஃவான செய்தி. இதை சிலர் நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர். என்றாலும் கஅபுல் அஹ்பார் அவர்களின் சொல்லாக வந்துள்ள அறிவிப்பாளர்தொடரை மிகப் பலமானவர்கள் அறிவித்துள்ளனர் என்பதால் இதுவே முன்னுரிமை பெற்ற செய்தி என சிலர் கூறியுள்ளனர்…


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அப்துர்ரஸ்ஸாக்

2 . ஸுஃப்யான் ஸவ்ரீ

3 . அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ

4 . தக்வான்-அபூஸாலிஹ்

5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


 


1 . இந்தக் கருத்தில் கஅபுல் அஹ்பார் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3748,


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-9273.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.