அன்பஸா பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரை அல்லாஹ் நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதை தாம் செவியேற்றதாக (எனது சகோதரி) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
(musannaf-abdur-razzaq-4828: 4828)عَبْدُ الرَّزَّاقِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْمُهَاجِرِ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ صَلَّى قَبْلَ الظُّهْرِ أَرْبَعَ رَكَعَاتٍ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ النَّارَ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-4828.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-4685.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் முஹாஜிர் என்பவரிடமிருந்து அறிவிக்கும் இஸ்ராயீல் அவர்கள் மட்டுமே முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் முஹாஜிர் —> அன்பஸா பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
மற்ற அதிகமானவர்கள், முஹம்மது பின் அப்துல்லாஹ்விற்கும், அன்பஸா பின் அபூஸுஃப்யான் அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் முஹாஜிரை கூறி அறிவித்துள்ளனர். எனவே மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் ஷாத் ஆகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-26764 .
சமீப விமர்சனங்கள்