தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-7318

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனக்கு ஒரு மனிதர் அறிவித்தார்:

ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர் விலகிச் சென்றார். அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், அவரிடம் பக்கத்தில் வரக் கூறினார்கள். அதற்கு அந்த மனிதர் நான் எப்போதும் வைக்கும் நோன்பை வைத்துள்ளேன் என்று கூறினார். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், நீ அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருந்தால் இதை சாப்பிடு! என்று கூறினார்கள்.

(musannaf-abdur-razzaq-7318: 7318)

عَنِ الثَّوْرِيِّ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ رَجُلٍ قَالَ:

كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ فِي رَمَضَانَ، فَجِيءَ بِشَاةٍ مَصْلِيَّةٍ فَتَنَحَّى رَجُلٌ مِنَ الْقَوْمِ قَالَ: «ادْنُ» قَالَ: إِنِّي صَائِمٌ، وَمَا هُوَ إِلَّا صَوْمٌ كُنْتُ أَصُومُهُ، فَقَالَ: «أَمَّا أَنْتَ تُؤْمِنُ بِاللَّهِ، وَالْيَوْمِ الْآخِرِ؟ فَاطْعَمَ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-7318.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-7124.




  • இது மவ்கூஃபான செய்தி.
  • இந்த அறிவிப்பில் ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் எனக்கு ஒரு மனிதர் அறிவித்தார் என்று கூறியதாக இடம்பெற்றாலும் இப்னு அபீஷைபா-9502 ல் ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள், அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பது போன்று இடம்பெற்றுள்ளது. என்றாலும் மன்ஸூர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அப்துல்அஸீஸ் ஆகியோரில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்களே மிகப்பலமானவர் என்பதால் மேற்கண்ட அறிவிப்பின் படியே முடிவு செய்ய வேண்டும்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் எனக்கு ஒரு மனிதர் அறிவித்தார் என்ற இந்த செய்தியின் படி அந்த மனிதர் ஸிலது பின் ஸுஃபராக இருந்தால் இந்த செய்தி அம்ர் பின் கைஸ் —>  அபூஇஸ்ஹாக் —> ஸிலது பின் ஸுஃபர் என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் செய்தியை (திர்மிதீ-686) பலப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

(நூல்: தஃக்லீகுத் தஃலீக் 3/142)

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இந்தக் கருத்தை உறுதியாக கூறவில்லை. சந்தேகமாகத்தான் கூறியுள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-686 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.