தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-7915

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வையுங்கள். ஏனெனில் அவ்விரண்டு நாட்களிலும் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும் அல்லாஹ்விற்கு இணைவைக்காத அனைத்து அடியார்களுக்கும் (அந்த நாட்களில்) அல்லாஹ் மன்னிப்பை வழங்குகின்றான். ஆனால் விரோதம், பொறைமை கொண்டவரைத் தவிர. அவர் அதிலிருந்து மீளும் வரை அவரை விட்டுவிடுங்கள் என (வானவர்களுக்கு) அல்லாஹ் கூறிவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(musannaf-abdur-razzaq-7915: 7915)

عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي سَبْرَةَ قَالَ : أَخْبَرَنِي مُسْلِمُ بْنُ أَبِي مَرْيَمَ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

صُومُوا يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ؛ فَإِنَّهُمَا يَوْمَانِ تُرْفَعُ فِيهِمَا الْأَعْمَالُ، فَيَغْفِرُ اللَّهُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِهِ إِلَّا لِصَاحِبِ إِحْنَةٍ يَقُولُ اللَّهُ: ذَرُوهُ حَتَّى يَتُوبَ


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-7915.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-7704.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24957-அபூபக்ர் பின் அபூஸப்ரா.. பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் அவர்கள், இவர் ஒரு பொருட்டே அல்ல; ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர்; பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளார். மற்ற அறிஞர்களும் இவரை பலவீனமானவர்; கைவிடப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-(4/489)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-747 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.