தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-25359

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 25359)

حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، يَرْوِيهِ، قَالَ:

«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا , فَلَيْسَ مِنَّا»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-25359.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




  • இந்த நூலின் சில பிரதிகளில் இந்த செய்தியை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் உபைதுல்லாஹ் பின் ஆமிர் என்றும், சில பிரதிகளில் அப்துல்லாஹ் பின் ஆமிர் என்றும் இடம்பெற்றுள்ளது. இரண்டில் உபைதுல்லாஹ் பின் ஆமிர் என்று வந்திருப்பதே சரியானதாகும் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.
  • இந்த அறிவிப்பாளர்தொடர் வெளிப்படையில் பார்க்கும் போது நபித்தோழரின் கூற்றுப்போன்று தெரிந்தாலும் يرويه-அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவித்தார் என்பது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று பொருளாகும் என்பதால் இதை நபியின் கூற்றாக கருதவேண்டும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-4943 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.