தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-30674

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்தார்கள். அப்போது இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்பவரால்) சிலுவையில் அறையப்பட்டிருந்தார்கள். மக்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இவர்தான் அஸ்மா” என்று கூறினார்கள். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களிடம் சென்று, “நிச்சயமாக இந்த உடல் ஒரு பொருட்டல்ல. உயிர்கள் அல்லாஹ்விடம் உள்ளன. ஆகவே, பொறுமையாக இருங்கள்; நன்மையை எதிர்பாருங்கள்” என்று அவர்களுக்கு நினைவூட்டி, உபதேசம் செய்தார்கள்.

அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், “யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்களின் தலை பனூ இஸ்ராயீலின் விலைமாதர்களில் ஒரு விலைமாதுவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதே! எனக்கு ஏன் பொறுமை இருக்காது?” என்று கூறினார்கள்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 30674)

حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ عَنْ مَنْصُورٍ عَنْ صَفِيَّةَ عَنْ أُمِّهَا قَالَتْ

دَخَلَ ابْنُ عُمَرَ الْمَسْجِدَ وَابْنُ الزُّبَيْرِ مَصْلُوبٌ , فَقَالُوا لَهُ: هَذِهِ أَسْمَاءُ , فَأَتَاهَا فَذَكَّرَهَا وَوَعَظَهَا وَقَالَ: ” إِنَّ الْجُثَّةُ لَيْسَتْ بِشَيْءٍ , وَإِنَّمَا الْأَرْوَاحُ عِنْدَ اللَّهِ , فَاصْبِرِي وَاحْتَسِبِي , فَقَالَتْ: مَا يَمْنَعُنِي مِنَ الصَّبْرِ وَقَدْ أُهْدِيَ رَأْسُ يَحْيَى بْنُ زَكَرِيَّا إِلَى بَغِيٍّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ “


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-30674.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு அபூஷைபா

2 . ஸுஃப்யான் பின் உயைனா

3 . மன்ஸூர் பின் அப்துர்ரஹ்மான்-(இவரின் தாயார் ஸஃபிய்யா பின்த் ஷைபா)

4 . ஸஃபிய்யா பின்த் ஷைபா

5 . இப்னு உமர் (ரலி)

6 . அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி)


மேற்கண்ட செய்தியின் அரபியில் உள்ள அறிவிப்பாளர்தொடர் தவறானது. இதில் இதன் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு அபூஷைபா

2 . ஸுஃப்யான் பின் உயைனா

3 . மன்ஸூர் பின் அப்துர்ரஹ்மான்-(இவரின் தாயார் ஸஃபிய்யா பின்த் ஷைபா)

4 . ஸஃபிய்யா பின்த் ஷைபா

5 . ஸஃபிய்யா பின்த் ஷைபா அவர்களின் தாயார் என்று உள்ளது.


சரியான அறிவிப்பாளர்தொடர் பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37328.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.